பும்ராஹ்வை நான் காதலிக்கிறேனா..? பிரபல நடிகை ஓபன் டாக்
இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராஹ்வுடன் தன்னை தொடர்பு படுத்தி பேசப்படும் அனைத்து வதந்திகளுக்கும் பிரபல பாலிவுட் நடிகை ரஷி கண்ணா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்து வருபவர் இளம் வேகப்பந்து வீச்சாளர் பும்ராஹ். இக்கட்டான கடைசி கட்டத்தில் தனது நேர்த்தியான பந்துவீச்சு மூலம் பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததன் மூலம் இந்திய அணியில் பும்ராஹ் தனக்கான ஒரு இடத்தை கெட்டியாக பிடித்து வைத்துள்ளார். தற்போதைய இந்திய அணியில் இவருக்கு மாற்று வீரர் யாரும் இல்லை என்பது நாம் அறிந்ததே.

ஒருவர் மக்கள் மத்தியில் நட்சத்திரமாக உருவெடுத்துவிட்டால் அவரை சர்ச்சைகளும், வதந்திகளும் துரத்த துவங்கி விடும் என்பதற்கு பும்ராஹ் மட்டும் விதி விலக்கா என்ன..? கடந்த சில மாதங்களாக பும்ராஹ்வை பிரபல பாலிவுட் நடிகையான ராக்ஷி கண்ணாவுடன் தொடர்புபடுத்தி பலர் பல தகவல்களை பரப்பி வந்தனர்.
தென் ஆப்ரிக்கா அணியுடனான கடந்த தொடரின் போது இந்திய அணியில் தனக்கு பிடித்த வீரர் பும்ராஹ் தான் காரணம் என்று ராக்ஷி கன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரே ஒரு ட்வீட்டே அவர்கள் இருவரையும் தொடர்புபடுத்தி பேசப்படுவதற்கான துவக்க புள்ளியாக இருந்தது.
இந்நிலையில் தன்னை பும்ராஹ்வுடன் இணைத்து பரவி வரும் அனைத்து செய்திகளுக்கும் ராக்ஷி கன்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ராக்ஷ் கன்னா கூறியதாவது, பும்ராஹ் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் என்பது மட்டும் தா எனக்கு தெரியும். அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது, நான் அவரை இதுவரை பார்த்ததும் கிடையாது பேசியதும் கிடையாது. எங்கள் இருவரையும் தொடர்புபடுத்தி வெளியாகும் அனைத்து செய்திகளும் உண்மைக்கு புறம்பானது, அதில் துளியளவும் உண்மை கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.