கோஹ்லியை வீழ்த்த எனக்கு ஐடியா கொடுத்ததே இவர் தான்; ஆடம் ஜாம்பா ஓபன் டாக்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்த, இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய பந்துவீச்சு ஆலோசகருமான ஸ்ரீதரன் ஸ்ரீராம் தான் உதவியாக இருந்ததாக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஸம்பா இந்திய கேப்டன் விராட் கோலியை வீழ்த்தும் ரகசியத்தை கூறியுள்ளார். 26 வயதான ஸம்பா கோலியை முதல் டி20 போட்டியில் 24 ரன்னிலும், ஹைத்ராபாத் ஒருநாள் போட்டியில் 44 ரன்னிலும் வீழ்த்தினார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகருமான ஸ்ரீதரன் ஸ்ரீராம் தான் உதவியாக இருந்ததாக கூறினார். 35 வயதான ஸ்ரீதரன் ஸ்ரீராம், இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்துவீச வேண்டும் என்று கூறியதாக ஸம்பா கூறினார்.
ஸம்பா, கோலியை 13 ஆட்டங்களில் 4 முறை அவுட் ஆக்கியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 2 முறை வீழ்த்தியுள்ளார்.
ஸ்ரீதரன் ஸ்ரீராமுக்கு அனுபவமும், இந்திய வீரர்களை பற்றிய அறிவும் உள்ளதாக தெரிவித்த ஸம்பா, ஸ்பின்னர்கள் மூலம் இந்தியாவை எதிர்கொள்ளும் உத்தியை உருவாக்கி கொடுத்தார் என்றும் கூறினார்.
இதேபோல் வீசிதான் கோலியின் விக்கெட்டை கைப்பற்றினேன் என்று கூறிய ஸம்பா, கோலியை பற்றிதான் அதிகமாக டீம் மீட்டிங்கில் பேசுவோம் என்றார்.
கோலி ஒரு சிறந்த, நம்பிக்கையளிக்கக்கூடிய வீரர் என்றார் ஸம்பா. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது.