டெஸ்ட் தொடரில் ஆட காத்திருக்கிறேன் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் என்னை அழைத்தால் என ரஷீத் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு முன்னணி சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டு வரும் அடில் ரஷீத், ஒரு தொடரின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், ஏதேனும் ஓரிரண்டு போட்டிகளில் அற்புதம் நிகழ்த்தி அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல கூடியவர்.

இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக பந்துவீசினார். 3 போட்டிகளில் 6 விக்கட்டுகள் வீழ்த்தினார். இறுதி போட்டியில் இந்திய அணியை தடுமாறசெய்து, 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இந்திய அணியை 256 ரன்களுக்குள் அடக்கியது இவரின் பந்து வீச்சு ஒரு முக்கிய காரணம். குறிப்பாக, விராத் கோலிக்கு இவர் வீசிய பந்து, நூற்றாண்டின் சிறந்த பந்து எனப்பட்ட, 1993ம் ஆண்டு ஷான் வார்னே மைக் கட்டிங்க்கு வீசிய பந்தை நினைவு படுத்தியது.

இந்திய அணியின் கேப்டன் இறுதி போட்டியில் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர் சிறப்பாக பந்துவீசி ஆட்டமிழக்க செய்தார். இல்லையெனில், சதம் விளாசி அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருப்பார்.
போட்டி முடிந்த பின் கோலி, நான் அண்டர் 19 காலத்தில் இருந்தே ரஷீத் பந்தை ஆடி வருகிறேன். நிச்சயமாக அவர் வீசிய பந்திலேயே சிறந்த ஒன்றாக இருக்கும் இது வாவ் என்று தான் கூறவேண்டும் என தெரிவித்தார்.

மேலும் ரஷீத் கூறுகையில், முதல் போட்டி தோல்விக்கு பின் 3-0 என்ற கணக்கில் தோற்போம் என அனைவரும் கோரினர். ஆனால், அணியில் ஒற்றுமை இருந்ததால் மீண்டு வந்து தொடரை வென்றுள்ளோம்.
தற்போது லிமிடெட் ஓவர் போட்டிகளில் நிறைய கவனம் செலுத்தி வருகிறேன். இனி 3 அல்லது 4 மாதங்களுக்கு போட்டிகள் இல்லை. அதனால் யார்க்ஷிரே அணிக்கு ஆடி வருகிறேன். இந்திய அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து வாரியம் என்னை அழைத்தால் சிறப்பாக செயல் பட காத்திருக்கிறேன் என கூறினார்.