அப்ரிடி  பேயடி!!  1

அப்ரிடி  பேயடி!!

நேற்று நடைபெற்ற நாட்வெஸ்ட் டி20 தொடரில் ஓப்பனராக களம் இறங்கிய அப்ரிதி 42 பந்தில் சதம் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். நாட்வெஸ்ட் டி20 தொடரில் ஹாம்ப்சைர் அணிக்காக ஆடி வருகிறார் அப்ரிதி. நேற்று நடந்த போட்டியில் ஹாம்ப்சைர் அணி டெர்பிசைர் அணிக்கு எதிராக விளையாடியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது ஹாம்ப்சைர் அணி. அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கினார் அப்ரிதி. தொடக்க முதலே தன் பாணியில் டெர்பிசைர் அணியின் பந்து வீச்சை விளாச தொடங்கினார் அப்ரிதி. அதிரடியாக ஆடிய அப்ரிதி 20 பந்தில் அரை சதம் கண்டார்.

அப்ரிடி  பேயடி!!  2

அதற்குப் பின் தனது விஸ்வரூபத்தை காட்ட தொடங்கிய அப்ரிதி டெர்பிசைர் பந்து வீச்சாளர்களை நாலா பக்கமும் பறக்க விட்டார். இந்த அதிரடி ஆட்டம் அவருக்கு 42 பந்தில் சதம் தேடித் தந்தது. இந்த ஆட்டத்தில் 10 ஃபோர்கள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். 43 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அப்ரிதி.

அப்ரிதியின் இந்த அபாரமான ஆட்டத்தால் ஹாம்ப்சைர் அணி 20 ஓவர்களில் 248ய9 ரன்கள் விளாசியது. பின்னர் 250 என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய டெர்பிசைர் அணி வெறும் 148 ரன்களில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் வித்தியாசத்தில் ஹாம்ப்சைர் அணியிடம் தோற்றது.

அவர் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கூறியதாவது,

நான் இவ்வளவு நாள் 7 அல்லது 8ஆவது இடத்தில் இறங்கியது நான் காலை என்னை வீணாக்குவது போல் தோன்றியது. அதனால் அணி நிர்வாகத்திடம் ஓப்பனராக களம் இறங்க கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு இப்படி ஒரு ஆட்டம் ஆடியதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இதன் காரணமாக அப்ரிதியை கிரிக்கெட் உலகில் வாழ்த்தி வருகின்றனர். அதிலிருந்து சில துளிகள்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *