14 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சென்று நீண்ட தொடரில் விளையாட போகும் சர்வதேச அணி ! ரசிகர்கள் கவலை !
பாகிஸ்தான் அணியில் கடந்த பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருக்கிறது. அந்த நாட்டில் தீவிரவாதம் அதிகமாக இருப்பதாகவும் தீவிரவாத செயலுக்கு அந்த நாடு மிகவும் துணை போவதாகவும் சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்பட்டு கொண்டிருக்கிறது.
மேலும் அங்கு சென்று சர்வதேச போட்டிகளில் விளையாடும் மற்ற வீரர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத அளவிற்கு தான் இருக்கிறது. ஏனெனில் 2009ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி போது அங்கு இருந்த தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் இலங்கை வீரர்களின் பேருந்துகளை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் பல வீரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. வீரர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இன்றி உயிர் தப்பினர்.

அதன்பின்னர் கடந்த 12 வருடமாக எந்த ஒரு அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடுவதில்லை. பாதுகாப்பு மிகவும் மோசமாக இருப்பதாகவும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாகவும் அனைத்து நாடுகளும் அங்கு சென்று விளையாட பயந்து கொண்டேதான் இருந்தது.
இதனை வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அதில் வெற்றி பெற முடியவில்லை.ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் துபாய், அபுதாபி ஆகிய மைதானங்களில் தங்களது போட்டிகளை நடத்தி கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த இடைப்பட்ட காலத்தில் ஜிம்பாப்வே அணி இரண்டு முறையும் வங்கதேச அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் பாகிஸ்தான் சென்று விளையாடி இருக்கிறது.

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் பாகிஸ்தானில் சென்று விளையாட கடுமையான முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொரானா.
கொரானா வைரஸ் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் சென்று விளையாடுவது ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டு தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு சென்று 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணி கடைசியாக 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடி இருந்து. அதன் பின்னர் 14 வருடங்கள் கழித்து பாகிஸ்தானில் விளையாடுகிறது தென் ஆப்பிரிக்க அணி. இந்த போட்டிகள் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் ஆகிய மிகப்பெரிய மைதானங்களில் நடக்க இருப்பதாக திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒருபக்கம் இப்படி இருந்தாலும் ரசிகர்கள் இதன் காரணமாக கவலையில் இருக்கின்றனர்.