விராட் கோலிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ! கௌதம் காம்பீருக்கு பதிலடி கொடுத்த ஹர்பஜன் சிங் ! 1

விராட் கோலிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ! கௌதம் காம்பீருக்கு பதிலடி கொடுத்த ஹர்பஜன் சிங்!

இந்திய முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் எப்போது பார்த்தாலும் இந்திய கேப்டன் விராட் கோலியை சீண்டிக் கொண்டே இருப்பார். ஐபிஎல் தொடரிலும் அப்படித்தான் செய்து கொண்டிருந்தார். அவர்கள் இருவருமே மைதானத்தில் நேருக்கு நேர் நின்று சண்டை போட்டுக் கொண்டதை நாம் பார்த்திருப்போம். இந்த வருட ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இதன் காரணமாக விராட் கோலிக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார் கவுதம் காம்பீர். ரோகித் சர்மா கோப்பையை வென்றுவிட்டால் விராட் கோலியை விட ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்றும் கூறியிருந்தார். அதனை தாண்டி தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி தோற்று விட்டது.

விராட் கோலிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ! கௌதம் காம்பீருக்கு பதிலடி கொடுத்த ஹர்பஜன் சிங் ! 2

மேலும் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் இரண்டு சதங்கள் அடித்து இருந்தார். இதனை வைத்து ஸ்டீவன் ஸ்மித் விராட் கோலியை விட மிகச் சிறந்த பேட்ஸ்மென் என்று கூறியிருந்தார். தொடர்ந்து இப்படியான செய்திகளை கொடுப்பது கௌதம் காம்பீரின் வழக்கம். அதை தாண்டி விராட் கோலி அணியை வழிநடத்தும் முற்றிலுமாக சரியில்லை என்றும் காம்பீர் பேசியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் “கேப்டன் பதவியை தன்னிடம் இருப்பதால் விராட் கோலி அழுத்தத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவருக்கு அது போன்ற ஒரு பொறுப்பு மிகவும் பிடிக்கும். அவருக்கு அது சுமை இல்லை. சவால்களை அதிகம் விரும்பக் கூடியவர் விராட்கோலி. அவர் ஒரு அணியின் தலைவர்.

விராட் கோலிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ! கௌதம் காம்பீருக்கு பதிலடி கொடுத்த ஹர்பஜன் சிங் ! 3

அணியை முன்னின்று வழி நடத்தி மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்து வெற்றிகளை பெற்று கொடுத்தவர் விராட் கோலி. தலைமைப் பொறுப்பை வைத்து விராட் கோலியின் பேட்டிஙை விமர்சிக்கக் கூடாது. ஏனென்றால் ஒருவர் மட்டுமே விளையாடி போட்டியை வெல்ல முடியாது. இரண்டாவது போட்டியில் கே.எல் ராகுல் ஓரளவிற்கு நன்றாக ஆடினார். மற்ற வீரர்களும் நன்றாக ஆடி இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்” இவ்வாறு ஹர்பஜன்சிங் பேசியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *