மோடிக்கு அப்பறம் தல தோனி தான்; ஆய்வு சொல்லும் அதிர்ச்சி ரிப்போர்ட் !! 1

மோடிக்கு அப்பறம் தல தோனி தான்; ஆய்வு சொல்லும் அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு மக்களை பெரிதும் ஈர்க்கக்கூடிய நபராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மக்களை மிகவும் ஈர்க்கும் நபர்கள் குறித்த ஆய்வை ‘YouGov’ என்ற அமைப்பு நடத்தியது. இந்த ஆய்வு 41 நாடுகளைச் சேர்ந்த 42ஆயிரம் மக்களிடம் நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்று தனித் தனியே ஈர்க்கும் நபர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவிலேயே மிகவும் ஈர்க்கப்பட்ட நபராக பிரதமர் மோடி உள்ளார். அதேபோல பெண்கள் பிரிவில் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் இந்தியாவிலேயே மிகவும் ஈர்க்கப்பட்ட பெண்மணியாக உள்ளார்.

மோடிக்கு அப்பறம் தல தோனி தான்; ஆய்வு சொல்லும் அதிர்ச்சி ரிப்போர்ட் !! 2

இந்த ஆய்வின்படி பிரதமர் மோடி மக்களை ஈர்க்கும் அளவு 15.66 சதவிகிதமாக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மக்களை ஈர்க்கும் நபராக உள்ளார். தோனி மக்களை ஈர்க்கும் அளவு 8.58 சதவிகிதமாக உள்ளது. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியவர்களைவிட அதிகம் ஈர்க்கப்பட்டவராக உள்ளார்.

மோடிக்கு அப்பறம் தல தோனி தான்; ஆய்வு சொல்லும் அதிர்ச்சி ரிப்போர்ட் !! 3

இந்தப்பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 6ஆவது இடத்தில் உள்ளார். இவர் மக்களை ஈர்க்கும் அளவு 5.81 சதவிகிதமாக உள்ளது. இவருக்கு அடுத்தப்படியாக ஏழாவது இடத்தில் விராட் கோலி உள்ளார். விராட் கோலி 4.46 சதவிகித மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *