ரோஹித் - விராத் கோலி பிளவு: கே எல் ராகுல் மற்றும் சஹல் இருவரும் விராத் கோஹ்லிக்கு ஆதரவு? 1

மறைமுகமாக ரோகித் சர்மாவை புறம் தள்ளிவிட்டு, விராட் கோலிக்கு கேஎல் ராகுல் மற்றும் சஹல் இருவரும் ஆதரவு தெரிவிக்கிறார்களா? என ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி போட்டியோடு தோல்வியை தழுவி வெளியேறிய பிறகு விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதேபோல் விராட் கோலியை மாற்றிவிட்டு ரோகித் சர்மாவிற்கு லிமிடெட் ஒவ்வொரு போட்டிகளில் கேப்டன் பொறுப்பு கொடுக்கலாம் என்ற விவாதங்களும் எழுந்தன.

ரோஹித் - விராத் கோலி பிளவு: கே எல் ராகுல் மற்றும் சஹல் இருவரும் விராத் கோஹ்லிக்கு ஆதரவு? 2

இதற்கிடையில் கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா இருவருக்குமிடையே அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன.

உலக கோப்பையில் சில போட்டிகளில் ரோகித் சர்மா கூறிய கருத்தை விராட் கோலி மறுத்துவிட்டு வேறொன்றை செய்ததே இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிளவிற்கு முக்கிய காரணம் எனவும் பல கதைகள் எழுந்தன. ஆனால், இதில் குறுக்கிட்ட பிசிசிஐ, நீங்கள் சொல்வதை போல அப்படி எந்தவொரு பிளவும் இதுவரை நாங்கள் அணியில் காணவில்லை என தெரிவித்தனர்.

இந்த பிளவு குறித்த பேச்சு ஓரளவிற்கு அடங்கி கொண்டிருக்கும் நிலையில், இன்ஸ்டாகிராமில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் அதிகாரபூர்வ பக்கத்தை திடீரென ரோகித் சர்மா அன்ஃபாலோ செய்தார். இச்சம்பவம் ரசிகர்களிடையே மேலும் சந்தேகத்தை கிளப்பியது.

ரோஹித் - விராத் கோலி பிளவு: கே எல் ராகுல் மற்றும் சஹல் இருவரும் விராத் கோஹ்லிக்கு ஆதரவு? 3

இந்நிலையில், தற்போது அனுஷ்கா சர்மாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தை இந்திய அணி வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் சஹல் இருவரும் புதிதாக பின் தொடர்ந்துள்ளனர். இது மறைமுகமாக விராட் கோலியின் கேப்டன் பொறுப்பிற்கு இவர்கள் இருவரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள், அதே நேரம் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிற்கு வருவதற்கு அவர்கள் விரும்பவில்லை என பலரும் பேசி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *