கோக், தம்சப் குடிக்கிறார்! அதனால் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை! 1

கேப்டன்சியிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ராஜினாமா செய்த பிறகு சவுரவ் கங்குலி இந்திய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை என்று முன்னாள் அணித்தேர்வாளர் அசோக் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

கேப்டன்சி பதவிக்கு அஜய் ஜடேஜா மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோரிடமிருந்து கங்குலிக்கு கடும் போட்டி இருந்து வந்தது என்கிறார் மல்ஹோத்ரா.கோக், தம்சப் குடிக்கிறார்! அதனால் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை! 2

துணை கேப்டனாக கங்குலியை நியமிப்பதற்கே பாடுபட வேண்டியதாயிற்று என்று கூறும் மல்ஹோத்ரா, “சவுரவ் கங்குலியை கேப்டனாக்குவது அவ்வளவு எளிதாக இல்லை. கொல்கத்தாவில் அவரைத் தேர்வு செய்தோம் உடனே பயிற்சியாளர் கங்குலியைப் பற்றி, ’கோக் அளவுக்கதிகமாகக் குடிக்கிறார், சிங்கிள்ஸ்தான் எடுக்கிறார்’ என்று முட்டுக்கட்டை போட்டார்.

அப்போது நான் தம்ப்ஸ் அப் குடிக்கிறார் என்பதற்காக அவர் எப்படி துணை-கேப்டனாகத் தகுதி இழப்பு செய்யும் என்று நான் கேள்வி எழுப்பினேன்.

சவுரவ் துணைக் கேப்டனாக நியமிக்கப்படுவதில் 3-2 என்று சாதக வாக்குகள் இருந்தன, ஆனால் அது அப்போது தேர்வுக்குழு தலைவரால் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்தது.கோக், தம்சப் குடிக்கிறார்! அதனால் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை! 3

நான் வாரியத் தலைவர் ஒருவர் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை, அவர் இதில் தலையிட்டு நாம் கங்குலியை துணை கேப்டனாக்குவத்தை மறு பரிசீலனை செய்வது நல்லது என்றார். ஆனால் நாங்கள் இரண்டு பேர் கங்குலிக்கு ஆதரவாக இருந்தோம்.

ஆனால் ஒரு தேர்வாளர் வாரியத் தலைவர் கூறிவிட்டார், ஆகவே நாம் கங்குலியை துணைக் கேப்டனாக்க முடியாது என்றார். எனவே வைஸ் கேப்டனாக கங்குலியை தேர்வுசெய்ய முடியவில்லை. பிற்பாடுதான் எங்களால் அவரை துணைக் கேப்டனாக்க முடிந்தது. இன்று கங்குலி பெரிய கேப்டன் என்ற பெயருடன் வாழ்ந்து வருகிறார்.கோக், தம்சப் குடிக்கிறார்! அதனால் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை! 4

ஆனால் அவரை கேப்டனாக்குவது அவ்வளவு எளிதாக அமையவில்லை. அனில் கும்ளே, அஜய் ஜடேஜா ஆகியோரிடமிருந்து போட்டி இருந்தது, ஆனாலும் கங்குலி கேப்டன் ஆனார், அது நல்ல பலன்களை அளித்தது. நான் ரொம்பவும் கஷ்டப்பட்டேன்.” என்றார் அசோக் மல்ஹோத்ரா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *