இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் இங்கிலாந்து அயர்லாந்து செல்லும் இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது லிமிடெட் ஓவர் போட்டிகளில் அஜின்க்யா ரஹானே இடம் பெறாதது ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது என கூறியுள்ளார்.
அஜின்க்யா ரஹானே இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர இடத்தை பிடித்து வருகிறார். மேலும் துணை கேப்டன் பொறுப்பிலும் உள்ளார். விராத் கோலி காயம் காரணமாக அவதிப்பட்ட பொழுது இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டிகளில் இவரே கேப்டன் பொறுப்பேற்று அணிக்கு வெற்றி தேடி தந்தார்.

லிமிடெட் ஓவர் போட்டிகளில் தொடர்ந்து இடம் பெற்றாலும் அவரால் ப்ளெயிங் லெவெனில் இடம் பெற முடியவில்லை. தவான் மற்றும் ரோஹித் சிறப்பாக ஆடுவதால் இவரை பற்றி யோசிக்க கேப்டன் விராத் கோலி க்கு நேரமே இல்லை.
ஆனால், இந்த முறை இங்கிலாந்து அயர்லாந்து செல்லும் இந்திய அணியில் ரஹானே க்கு பெயர் பட்டியலில் கூட இடம் அளிக்கப்படவில்லை. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, லிமிடெட் ஓவர் போட்டிகளில் ரஹானே க்கு இந்த முறை இடம் அளிக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது. நீண்ட நேரம் களத்தில் நின்று நிதானமாக ஆட கூடிய வீரர்களில் ஒருவர் ரஹானே. விக்கெட் இழக்கும் நேரங்களில் நின்று ஆட கூடியவர், இவரை சேர்க்காதது நிச்சயம் ஆச்சர்யம் அளிக்கும் என கூறினார்.

மேலும், இந்த தொடர் இங்கிலாந்து மைதானங்களின் நிலையை அறிந்து உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட நிச்சயம் உதவும். இந்திய அணி வெல்வதற்ற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சில தவறுகளை திருத்தி கொண்டு முன் வந்தால் நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் வெல்லலாம் என தெரிவித்தார்.