ஹர்திக் பாண்டியா அவ்வளவு முக்கியம்னா இனி இவரை எடுக்காதீங்க... இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 1

ஹர்திக் பாண்டியா பந்துவீசாவிட்டால் ஷர்துல் தாகூருக்கு இந்திய அணி வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த தொடருக்கான இரண்டு பயிற்சி போட்டியிலும் அசால்டாக அபார வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்ததாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

ஹர்திக் பாண்டியா அவ்வளவு முக்கியம்னா இனி இவரை எடுக்காதீங்க... இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 2

சாம்பியன் பட்டத்தை வெல்ல தகுதியான அணிகளில் முதன்மையானதாக பார்க்கப்படும் இந்திய அணிக்கு முன்னாள் இந்திய வீரர்கள் பலர் தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக பந்துவீச முடியாமல் தவித்து ஹர்திக் பாண்டியாவை அணியில் எடுக்கலமா..? எடுத்தால் அவரை எந்த இடத்தில் எப்படி விளையாட வைப்பது என்பது குறித்தே முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான அஜித் அகார்கர், ஹர்திக் பாண்டியாவால் பந்துவீச முடியாவிட்டால் ஷர்துல் தாகூருக்கும் ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா அவ்வளவு முக்கியம்னா இனி இவரை எடுக்காதீங்க... இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 3

இது குறித்து அஜித் அகார்கர் பேசுகையில், “ஹர்திக் பாண்டியா பந்துவீசாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். ஹர்திக் பாண்டியா பந்துவீசமாட்டார் என்றால், அணி பேலன்ஸை கருத்தில்கொண்டு புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரை சேர்க்க வேண்டும்” என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *