இந்திய அணியின் தேர்வுக்குழு மாற்றம்! பொறுப்பேற்கப் போகும் முன்னாள் வீரர்!
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் பொறுப்பிற்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக முன்னாள் வீரர்கள் சேட்டன் ஷர்மா, மணிந்தேர் சிங், சிவசுந்தர் தாஸ் ஆகியோரும் விண்ணப்பம் செய்திருக்கின்றனர். ஏற்கனவே ஹர்விந்தர் சிங், சுனில் ஜோஷி ஆகியோர் மத்திய மற்றும் தெற்கு மண்டலம் ஆகியவற்றிலிருந்து தேர்வு செய்யப் பட்டிருக்கின்றனர்

இவர்களுடன் மேற்கு மண்டலத்தில் இருந்து மும்பையைச் சேர்ந்த அஜித் அகர்கர் விண்ணப்பிக்கலாம் என்று தெரியவந்திருக்கிறது. இந்திய அணிக்காக 231 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் அஜித் அகர்கர். மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்திருக்கிறார். புதிய விதிகளின் படி சர்வதேச போட்டிகளில் அதிக முறை இந்திய அணிக்காக விளையாடியவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். சுனில் ஜோஷி இந்திய அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகள், 69 ஒருநாள் போட்டிகள்என 84 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
அதே நேரத்தில் சேத்தன் சர்மா விண்ணப்பம் செய்ததை உறுதி செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

நான் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருக்கிறேன் தேர்வு குழுவில் உறுப்பினராக இருப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய இலக்கு இந்திய அணிக்காக சேவை செய்ய வேண்டும் என்பதுதான். சுனில் கவாஸ்கர், கபில்தேவ், திலிப் வெங்சர்க்கார் ஆகிய ஜாம்பவான்களுடன் சேர்ந்து விளையாடி இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சேத்தன் சர்மா.
எப்படிப்பார்த்தாலும் 231 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் அஜித் அகர்கருக்கு தான் தேர்வு குழு தலைவர் பதவிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இன்னும் சில வாரங்களில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் தேர்வுக்குழு மாற்றியமைக்கப்படும் என்று தெரியவந்திருக்கிறது.