இவரை ஏன் இன்னும் வெளியேற்றவில்லை ! கிறிஸ் கெயிலை தூக்கிவிட்டு இவருக்கு ஒரு சான்ஸ் கொடுங்கு ! – அஜித் அகர்கர் பேட்டி

14வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 15 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. 

இவரை ஏன் இன்னும் வெளியேற்றவில்லை ? கிறிஸ் கெயிலை தூக்கிவிட்டு இவருக்கு ஒரு சான்ஸ் கொடுங்கு ! - அஜித் அகர்கர் பேட்டி 2

இந்த ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மன் கிறிஸ் கெயில் இதுவரை நான்கு போட்டிகளில் பேட்டிங் செய்திருக்கிறார். ஆனால் இவர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இதுவரை விளையாடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் வீரரான கெயில் இந்த நான்கு போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாகவே 76 ரன்கள் தான் குவித்து இருக்திறார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அடித்த 40 ரன்களே அதிகபட்சமாக இருக்கிறது. இதன்பிறகு 10,11,15 என மூன்று முறை செற்ப ரன்னில் விக்கெட் இழந்திருக்கிறார். இதனால் இவரது ஆட்டம் விமர்சனத்திற்கு உள்ளாகியது. மேலும், சிலர் இவரை அணியில் இருந்து வெளியேற்றிவிட்டு மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு தருமாறு கூறி இருக்கின்றனர்.

இவரை ஏன் இன்னும் வெளியேற்றவில்லை ? கிறிஸ் கெயிலை தூக்கிவிட்டு இவருக்கு ஒரு சான்ஸ் கொடுங்கு ! - அஜித் அகர்கர் பேட்டி 3

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் மோசமாக விளையாடி வரும் கிறிஸ் கெயிலை அணியில் இருந்து வெளியேற்றிவிட்டு பஞ்சாப் அணி டேவிட் மாலன் போன்ற சிறந்த டி20 வீரருடன் விளையாட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில் “முதல் போட்டியில் 40 ரன்கள் அடித்து அசத்திய கிறிஸ் கெயில் இதன் பிறகு மோசமான ஆடத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதே போல் தான் கடந்த சீசனிலும் விளையாடினார்.

இவரை வெளியேற்றுவது கடினம் தான். ஆனால் இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் வெளியேற்றாமல் வைத்திருப்பீர்கள் ? அதேபோல் நிக்கோலஸ் பூரனும் ரன்களை குவிக்க தவறி வருகிறார். இந்த சமயத்தில் டேவிட் மாலன் போன்ற சர்வதேச வீரரை தேர்வு செய்ய வேண்டும்” என்று அஜித் அகர்கர் பேசியிருக்கிறார். நியூசிலாந்து வீரரான டேவிட் மாலன் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை ஏன் இன்னும் வெளியேற்றவில்லை ? கிறிஸ் கெயிலை தூக்கிவிட்டு இவருக்கு ஒரு சான்ஸ் கொடுங்கு ! - அஜித் அகர்கர் பேட்டி 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *