ஹர்திக் பாண்டியா, விராட் கோலிக்கே இடம் இல்லை... நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா !! 1
ஹர்திக் பாண்டியா, விராட் கோலிக்கே இடம் இல்லை… நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா

முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடருக்கான அவரது சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

50 ஓவர் போட்டிகளுக்கான ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடத்தப்பட்டது.

ஹர்திக் பாண்டியா, விராட் கோலிக்கே இடம் இல்லை... நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா !! 2

இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றின் முடிவில் இந்திய அணியும், இலங்கை அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்தியா இலங்கை இடையேயான இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகவே, இந்திய அணி 6 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 8வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றியது.

இந்தநிலையில், நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, அவரது சிறந்த ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

தனது அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, துவக்க வீரராகவும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்து, அவருடன் சுப்மன் கில்லையும் துவக்க வீரராக தேர்வு செய்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா, விராட் கோலிக்கே இடம் இல்லை... நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா !! 3

மிடில் ஆர்டரில் இலங்கை அணியின் குஷால் மெண்டீஸ் மற்றும் இந்திய அணியின் கே.எல் ராகுல் மற்றும் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளார். குஷால் மெண்டீஸ் அதிகமான ரன் குவித்ததால் விராட் கோலிக்கு பதிலாக குஷால் மெண்டீஸிற்கு தனது ஆடும் லெவனில் இடம் கொடுத்துள்ளதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா, விராட் கோலிக்கே இடம் இல்லை... நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா !! 4

அடுத்ததாக பாகிஸ்தான் அணியின் இஃப்திகார் அஹமதிற்கும், இலங்கை அணியின் துனித் வெல்லால்கேவிற்கு இடம் கொடுத்துள்ள ஆகாஷ் சோப்ரா, பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஷாகின் அப்ரிடி, குல்தீப் யாதவ், பதிரானா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு தனது ஆடும் லெவனில் இடம் கொடுத்துள்ளார். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் மிக சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் துணை கேப்டனான ஹர்திக் பாண்டியாவிற்கு ஆகாஷ் சோப்ரா தனது அணியில் இடம் கொடுக்கவில்லை.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, சுப்மன் கில், குஷால் மெண்டீஸ், கே.எல் ராகுல், முகமது ரிஸ்வான், இஃப்திகார் அஹமத், துனித் வெல்லால்கே, ஷாகின் ஷா அப்ரிடி, குல்தீப் யாதவ், மத்தீஷா பதிரானா, முகமது சிராஜ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *