பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹிப் அக்தர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்தது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் முதல் டெஸ்டில் மூன்றாவது நாள் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 36 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து மிகக்கேவலமாக விளையாடியது. இந்திய அணி வீரர்கள் ஒற்றை இழக்க ரன்களில் அவுட் ஆகினர்.
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியதாவது இந்தியா 36 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் சுருண்டது ஒருவிதத்தில் பாகிஸ்தான் அணிக்கு சந்தோசமான விஷயமாக அமைந்தது.
ஏனென்றால் இதற்கு முன்னால் 2013இல் சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இந்தியாவின் இந்த மிக மோசமான செயல்பட்டால் பாகிஸ்தான் அணியின் மோசமான ரெக்கார்டை இந்தியா முறியடித்து என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வு நடப்பதெல்லாம் சர்வசாதாரண விஷயம் ஆனால் இதற்க்காக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் விமர்சிக்கப்படுவார்கள் அதை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.