தனக்கு பிடித்த ஆடும் லெவனை அறிவித்த அலெய்ஸ்டர் குக்
இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் அலைஸ்டர் குக் கடந்த இரண்டு நாட்களுக்கு சர்தேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வரலாற்றில் 10,000 ரன்களை கடந்த ஒரே வீரர் இவர்தான். மேலும், இங்கிலாந்து அணிக்காக அதிக எட்ஸ்ட் போட்டிகளில் ஆடியவரும் (168) இவர்தான்.
இப்படி பல டெஸ்ட் பேட்டிங் சாதனைகளை தன்னுள்ளே வைத்துள்ள இவர் இன்னும் 3000+ டெஸ்ட் ரன்கள் அடித்திருந்தால், நமது கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை எளிதில் முறியடித்திருப்பார். ஆனால், அது சாத்தியமில்லை என்று அவருக்கே தெரிந்துள்ளது.

ஏன்னால் இனிமேஎல் ஆட முடியாது, என்னிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என அவரே ஒப்புக்கொண்டு ஓய்வினை அறிவித்துள்ளார். அது எப்படி அனைவராலும் கிரிக்கெட் கடவுள் ஆகிவிட முடியுமா?
இதில் ஆச்சரியம் என்வெஎன்றால் கிரிக்கெட் உலகின் ஜாம்வனான் சச்சின் டெண்டுல்கருக்கு தலைசிறந்த அணியின் இடமில்லையாம். 201 டெஸ்ட் போட்டிகள் 15,0000+ டெஸ்ட் ரன்கள், 51 டெஸ்ட் சதங்கள், 70+ டெஸ்ட் அரை சதங்கள் அடித்த ஒரு வீரருக்கு இடமில்லை என்றால்? வேறு யாருக்கு அந்த அணியில் இடம் பிடிக்க தகுதி இருக்கிறத் என்று குக்கிற்கு தெரியவில்லை.

அதபோல், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலில் 10,000 ரன்களை கடந்த இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கருக்கும் இடமில்லையாம். இந்த இருவர் போக, ராகுல் டிராவிட் மற்றும் சேவாக் ஆகிய ஜாம்பவான்களுக்கும் இடமில்லை என்று கூறியுள்ளார் அலைஸ்டர் குக்.
இது என்ன மாதிரியான் ஒரு பார்வை என்று தெரியவில்லை. ஆனால், இங்கிலாந்து வீரர்களுக்கு இந்திய ஜாம்பவான்களை பாரட்டுவதற்கு எப்போதும் வாய் வந்ததில்லை. வரலாறும் நமக்கு இததைத்தான் கூறுகிறது. அதேபோல் தற்போது இக்கால வீரர் அலைஸ்டர் குக்கும் இந்திய ஜாம்பவான்களை அவமதிக்கும் வகையில் அணியை தேர்வு செய்துள்ளார். ஒரு இந்தியருக்கு கூடவா இந்த தலைசிறந்த் அணியில் இடம் பிடிக்க தகுதி இல்லை.?

அலைஸ்டர் குக் தேர்வு செய்த வாரலாற்றின் தலைசிறந்த டெஸ்ட் அணி:
1, கிரஹம் கூச் (கேப்டன்), 2, மேத்யூஸ் ஹைடன், 3;பிரையன் லாரா, 4;ரிக்கி பாண்டிங், 5; ஏ.பி டிவில்லியர்ஸ், 6; குமார் சங்ககாரா, 7;ஜக் காலிஸ் , 8;முத்தையா முரளிதரன், 9; சேன் வார்ன், 10, ஜேம்ஸ் ஆண்டர்சன், 11; கிளன் மெக்ரத்.