இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக பொளந்து கட்டிய அலெய்ஸ்டர் குக் !! 1
இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக பொளந்து கட்டிய அலெய்ஸ்டர் குக் 

இந்திய அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான அங்கீகாரமில்லாத டெஸ்ட் போட்டியில், அலைஸ்டர் குக் அபார சதமடித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்றது. வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுடனான தொடரை வென்று கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி, அங் கீகாரமில்லாத டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி, முதல் போட்டியில் டிரா கண்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்றது

அடுத்து இந்திய அணி, அடுத்து இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் மோதும் போட்டி நேற்றுத் தொடங்கியது. வொர்சஸ்டரில் தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, தமிழக வீரர் முரளி விஜய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கருண் நாயர் தலைமையிலான இந்தப் போட்டியில் இவர்கள் தவிர, பிருத்வி ஷா, மயங்க் அகர்வால், கருண் நாயர், ரிஷப் பண்ட், ஜெயந்த் யாதவ், நதீம், ராஜ்புத், சைனி, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து லயன்ஸ் அணி வலுவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதில் சர்வதேச போட்டியில் விளையாடும் அலைஸ்டர் குக், டேவிட் மலன், கிறிஸ் வோக்ஸ், டாம் பெஸ், ஜேக் லீக், சாம் குர்ரன் ஆகியோர் விளையாடுகின்றனர். டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது

இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக பொளந்து கட்டிய அலெய்ஸ்டர் குக் !! 2

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், அலைஸ்டர் குக் களமிறங்கினார். பர்ன்ஸ் 5 ரன்னில் நவ்தீப் சைனி பந்துவீச்சில் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, அடுத்து நிக் குப்பின்ஸ் வந்தார். குக்கும் குப்பின்ஸும் நிலைத்து நின்று ஆடினர். குப்பி ன்ஸ் 73 ரன்கள் எடுத்தபோது அங்கித் ராஜ்புத் பந்தில் முரளி விஜய்யிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து மலன் வந்தார். பொறு மையாக ஆடிய குக் அபார சதமடித்தார். அவரது விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர்களால் வீழ்த்த முடியவில்லை. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 2 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. குக் 154 ரன்களும் மலன் 59 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *