எனக்கு கொரானா பாதிப்பு இல்லை; கடுப்பான இங்கிலாந்து வீரர் !! 1

எனக்கு கொரானா பாதிப்பு இல்லை; கடுப்பான இங்கிலாந்து வீரர்

எனக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளது என்று பரப்பப்படும் பொய் செய்திகளை உடனடியாக நிறுத்துங்கள் என்று அலெக்ஸ் ஹேல்ஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த வாரமே உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளும் தள்ளி வைக்கப்பட்டன.

ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆட்டங்கள் மட்டும் ரசிகர்கள் ஏதுமின்றி மூடிய மைதானங்களில் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் வரை போட்டி நடைபெற்றது. இரண்டு அரையிறுதி போட்டிகள் இன்றும், இறுதிப் போட்டி நாளையும் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் இன்று நாக்-அவுட் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்தது. இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் அலெக் ஹெல்ஸ் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

டி20 தொடரில் விளையாடிய வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அந்த வீரரின் பெயரை வெளியிடவில்லை.

எனக்கு கொரானா பாதிப்பு இல்லை; கடுப்பான இங்கிலாந்து வீரர் !! 2

ஆனால், அந்த வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ரமீஸ் ராஜா தெரிவித்தார். அதேபோல் கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டது. இது காட்டுத்தீ போன்ற மளமளவென பரவியது.

இந்நிலையில் இதுபோன்ற போலி செய்திகளை நிறுத்துங்கள் என அலெக்ஸ் ஹேல்ஸ் சாடியுள்ளார். விவகாரம் பிரச்சினையான பிறகு, அலெக்ஸ் ஹேல்ஸ் டெஸ்ட் செய்து கொள்ளவில்லை. தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார் என ரமீஸ் ராஜா தெரிவித்தார். கல்ஃப் நியூஸ் செய்தியாளர் டுவிட்டரை அழித்துள்ளார். ஆனால் முன்னதாகவே எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட் வேகமாக பரவி வருகிறது.

https://twitter.com/AlexHales1/status/1239872849155940352?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1239872849155940352&ref_url=https%3A%2F%2Fsportzwiki.com%2Fcricket%2Falex-hales-denies-positive-coronavirus

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய், டைமல் மில்ஸ், லியம் டவ்சன், லியம் லிவிங்ஸ்டோன், லெவிஸ் கிரேகோரி, ஜேம்ஸ் வின்ஸ், ஆகியோர் அவர்களது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *