கிடைத்த வாய்பை வீணடிக்க மாட்டேன்; அலெக்ஸ் ஹெல்ஸ் நம்பிக்கை !! 1

கிடைத்த வாய்பை வீணடிக்க மாட்டேன்; அலெக்ஸ் ஹெல்ஸ் நம்பிக்கை

டேவிட் வார்னருக்கு பதிலாக ஹைதராபாத் அணி தன்னை தேர்ந்தெடுத்திப்பது மகிழ்ச்சியளிப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா அணிக்கு  எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தி கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் கிரிக்கெட் எதிர்காலம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிடைத்த வாய்பை வீணடிக்க மாட்டேன்; அலெக்ஸ் ஹெல்ஸ் நம்பிக்கை !! 2

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் மட்டுமல்லாமல் அடுத்த சில மாதங்களுக்கு இருவரும் உள்ளூர் போட்டிகளில் கூட தலை காட்ட முடியாத அளவிற்கே தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரும் இவர்களை இந்த முறை விளையாட அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதன் பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக ரஹானேவை கேப்டனாக நியமித்தது. அதே போல் ஹைதராபாத் அணியின் வார்னருக்கு பதிலாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை தனது கேப்டனாக நியமித்தது.

கிடைத்த வாய்பை வீணடிக்க மாட்டேன்; அலெக்ஸ் ஹெல்ஸ் நம்பிக்கை !! 3

இந்நிலையில் வார்னருக்கு பதிலாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வரும் அலெக்ஸ் ஹேல்ஸை இன்று தனது அணியில் எடுத்துள்ளது. ஐ.பி.எல் ஏலத்தில் விலை போகாத இவரை ஹைதரபாத் அணி அவரது அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய் கொடுத்து தனது அணியில் எடுத்துள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத் அணியில் தான் இணைந்தது குறித்து இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கிடைத்த வாய்பை வீணடிக்க மாட்டேன்; அலெக்ஸ் ஹெல்ஸ் நம்பிக்கை !! 4

இது குறித்து அலெக்ஸ் ஹேல்ஸ் கூறியதாவது, ஹைதரபாத் அணியில் இணைந்ததுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. உலகின் நம்பர் 1 உள்ளூர் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

வார்னர் இல்லாதது கண்டிப்பாக ஐதராபாத் அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். ஐதராபாத் அணிக்காக 59 இன்னிங்சில் விளையாடி இருக்கும் டேவிட் வார்னர் 2579 ரன்கள் அடித்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு ஐதராபாத் அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்த டேவிட் வார்னரை, 2018 ஐபில் தொடருக்காக அவரை தக்கவைத்து கொண்டது.

கிடைத்த வாய்பை வீணடிக்க மாட்டேன்; அலெக்ஸ் ஹெல்ஸ் நம்பிக்கை !! 5
CARDIFF, WALES – JUNE 09: New Zealand captain Kane Williamson leads his team off the field after the ICC Champions Trophy match between New Zealand and Bangladesh at SWALEC Stadium on June 9, 2017 in Cardiff, Wales. (Photo by Stu Forster/Getty Images)

கடந்த வருடம் நடந்த ஐபில் தொடரில் தொடர்ந்து ஐதராபாத் அணிக்காக வில்லியம்சன்னால் விளையாட முடியவில்லை. அவருக்கு பதிலாக பந்துவீச்சை பலப்படுத்த, வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்தார்கள். அவர் ஒரு நல்ல டி20 பேட்ஸ்மேன் இல்லை என்றாலும், அவர் சர்வதேச கேப்டனாக இருப்பதால், ஐதராபாத் அணியின் கேப்டனாக அவரை நியமித்துள்ளார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *