இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் இருந்து நட்சத்திர வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் திடீரென சொந்த காரணங்களுக்காக வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 17ஆம் தேதி உலக கோப்பை செல்லும் 15 வீரர்களின் பட்டியலை அறிவிப்பது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதில் எதிர்பார்க்கப்படாத சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப் பட்டிருந்தது ஆனால் இந்த அணி விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில் அணியின் நட்சத்திர வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் உலக கோப்பை தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகிக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
அலெக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து அணியின் ஒருநாள் தொடரில் கடந்த 4 வருடங்களாக மிக முக்கிய பங்கு வகித்துள்ளார் குறிப்பாக ஆஸ்திரேலியா இந்தியா தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு முக்கியமாக கட்டங்களில் வெற்றியையும் தேடித் தந்துள்ளார்.
கடந்த ஒரு வருடங்களாக சொந்த விஷயங்களுக்காக பல இன்னல்களை சந்தித்து வருகிறார் ஹேல்ஸ். குறிப்பாக, அவரது பெண் தோழி ஹேல்ஸ் தன்னை ஏமாற்றிவிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதற்கான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு மன அழுத்தத்தினால் மைதானத்தில் கத்தி கூச்சலிட்டு ஹெல்ஸ்க்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அபராதமும் விதித்தது.

இங்கிலாந்து அணியை உள்ளூர் அணியான நாட்டிங்காம்ஷைர் அணியில் இந்த வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இதுவரை ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. இதற்காக சரியான காரணங்களும் அவர் தெரிவிக்கவில்லை.
இருப்பினும், இவருக்கு உலகக்கோப்பை அணியில் நன்கு செயல்படுவார் என வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பட்டியல் வெளியிடப்பட்ட இரண்டு நாட்களில் சொந்த காரணங்களுக்காக நான் உலக கோப்பை தொடரில் ஆட போவதில்லை அதிலிருந்து விலகிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
உலக கோப்பை இங்கிலாந்து அணி : ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஜோ ரூட், இயோன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளென்கட், அடில் ரஷீத், மார்க் வூட், அலெக்ஸ் ஹேல்ஸ், டாம் குர்ரான், ஜோ டென்லி, டேவிட் வில்லி