விண்டீஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகும் தென் ஆப்ரிக்காவின் முன்னாள் வீரர்
விண்டீஸ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆல்ஃபோன்சோ தாமாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தாமஸ், தென் ஆப்ரிக்கா அணிக்காக இதுவரை 225 டி.20 போட்டிகளில் விளையாடி 263 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டி.20 போட்டிகளில் அனுபவம் வாய்ந்த தாமஸ், ஐபி.எல், பி.பி.எல் போன்ற உள்ளூர் டி.20 தொடர்களிலும் விளையாடி உள்ளார்.
பிராவோ, சுனில் நரைன், பொலார்டு போன்ற விண்டீஸ் அணியின் அனுபவ வீரர்கள் பலர், விண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக விண்டீஸ் அணிக்காக பல போட்டிகளில் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஏற்கனவே டி.20 ஸ்பெசலிஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு டி.20 போட்டி என்று வந்துவிட்டால் வாண வேடிக்கை காட்டும் விண்டீஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளது விண்டீஸ் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாம்ஸ் தான் விண்டீஸ் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை விண்டீஸ் கிரிக்கெட் வாரியமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தாமஸ், தென் ஆப்ரிக்கா அணிக்காக இதுவரை 225 டி.20 போட்டிகளில் விளையாடி 263 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.