உண்மையான “கிங்”குடா எங்க விராட் கோலி... சதம் அடித்து பல சாதனைகள் படைத்த விராட் கோலி; கொண்டாடும் ரசிகர்கள் !! 1
உண்மையான “கிங்”குடா எங்க விராட் கோலி… சதம் அடித்து பல சாதனைகள் படைத்த விராட் கோலி; கொண்டாடும் ரசிகர்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் சதம் அடித்து பல சாதனைகளும் படைத்த விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதி வருகின்றன.

உண்மையான “கிங்”குடா எங்க விராட் கோலி... சதம் அடித்து பல சாதனைகள் படைத்த விராட் கோலி; கொண்டாடும் ரசிகர்கள் !! 2

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கம் அமைத்து கொடுத்தார். பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சுப்மன் கில் தசைபிடிப்பு காரணமாக ரிட்டயர் ஹர்ட் முறையில் பாதியில் வெளியேறினார்.

உண்மையான “கிங்”குடா எங்க விராட் கோலி... சதம் அடித்து பல சாதனைகள் படைத்த விராட் கோலி; கொண்டாடும் ரசிகர்கள் !! 3

இதன்பின் கூட்டணி சேர்ந்த விராட் கோலி – ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தது. யாராலும் குறையே சொல்ல முடியாத சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி 106 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

உண்மையான “கிங்”குடா எங்க விராட் கோலி... சதம் அடித்து பல சாதனைகள் படைத்த விராட் கோலி; கொண்டாடும் ரசிகர்கள் !! 4

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை வான்கடே மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்த ஸ்ரேயஸ் ஐயரும் கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார்.

விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 70 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 105 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கே.எல் ராகுல் 39* ரன்களும், சுப்மன் கில் 80* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்த இந்திய அணி 397 ரன்கள் குவித்தது.

உண்மையான “கிங்”குடா எங்க விராட் கோலி... சதம் அடித்து பல சாதனைகள் படைத்த விராட் கோலி; கொண்டாடும் ரசிகர்கள் !! 5

இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளும் படைத்துள்ள விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. முன்னாள், இந்நாள் வீரர்கள்  கிரிக்கெட் ரசிகர்கள் என அனைவரும் விராட் கோலியின் வெறித்தனமான பேட்டிங்கை வியந்து பாராட்டி வருகின்றனர்.

அதில் சில;

All hail the king

Amazing
Unreal

Dont think anyone is going to there with him at the summit #CricketTwitter    #semis #IndiaVsNewZealand

— DK (@DineshKarthik) November 15, 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *