தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்காக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, அவருக்கு பிறந்த புது குழந்தையின் பெயரை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் ரவீந்திர ஜடேஜா.
“எங்களது குட்டி ராணிக்கு ‘நித்யானா’ என பெயர் சூட்டியுள்ளோம்,” என ரவீந்திர ஜடேஜா ட்வீட் செய்திருந்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து சிறப்பாக பந்து வீசி டெஸ்ட் பந்துவீச்சாளர்க்கான தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார் ரவீந்திர ஜடேஜா.
அவருக்கு குழந்தை பிறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி விளையாட இங்கிலாந்து சென்றார்.
கடந்த வருடம் ஏப்ரல் 17ஆம் தேதி தான் ரவீந்திர ஜடேஜாவுக்கும் ரீவா சோலங்கிக்கும் திருமணம் நடந்தது.
தற்போது, இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள இந்திய அணி, கோப்பையை தக்கவைத்து கொள்ள முனைப்புடன் இருக்கிறது. இந்நிலையில், ஜூன் 15ஆம் தேதி அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா.
அவருக்கு இந்த சாம்பியன்ஸ் டிராபியில் பேட்டிங் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் விளையாடிய மூன்று ம்=போட்டிகளில் 3 விக்கெட் மட்டும் எடுத்துள்ளார், ஆனால் ரன் குறைவாக கொடுத்து சிறப்பாக பந்து வீசியுள்ளார்.
அவர் பேட்டிங்கிலும் பயிற்சி எடுத்து வருவதால், இந்திய அணிக்கு தேவை படும் போது, த்ரில்லிங் பினிஷ் செய்வார் என எதிர்பார்க்க படுகிறது.