50 ஓவர் போட்டிக்கான ஆல் டைம் இந்திய அணியை தேர்வு செய்த இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ்.

இந்திய அணியின் ஜாம்பவான் மற்றும் இந்திய அணிக்காக முதன் முதலில் உலக கோப்பை உலகக்கோப்பையை கைப்பற்றி கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கபில் தேவ் 50 ஓவர் கிட் பெற்றோருக்கான சிறந்த அட்டவணை தேர்வு செய்துள்ளார்.
இவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான சிறந்த இந்திய ஆடும் லவனை தெரிவித்தார்.

அதில் அவர் கூறியதாவது இந்திய அணிக்காக துவக்க வீரராக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக் தனது அணியில் இடம் பெற்றுள்ளனர், அடுத்து மூன்றாவதாக களமிறங்க தற்போது உள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் அதன்பின் தி வால் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் அதன்பின் யுவராஜ் சிங்கும் தனது அணியின் முக்கிய வீரர்கள்.

மேலும் அவர் கூறியதாவது எம்எஸ் தோனி போன்று யாராலும் கீப்பிங் செய்ய முடியாது அவர்தான் எனது அணி விக்கெட் கீப்பர் ஆவார் அவரின் இடத்தை வேறு எவராலும் பூர்த்தி செய்ய முடியாது என்று கூறினார்.
அடுத்ததாக இந்திய அணியில் 300க்கும் அதிகமான விக்கெட் விக்கெட்டுகளை எடுத்த ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஜாகிர் கான் மற்றும் இளம் வீரரான ஜஸ்பிரித் பும்ராவும் தனது அணியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள்.
இதைத்தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரான அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் எனது அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் என்றும் அவர் கூறினார்.

சச்சின் டெண்டுல்கர், சேவாக், விராட் கோலி, ராகுல் டிராவிட், யுவராஜ்சிங், எம்எஸ் தோனி ,ஜவகல் ஸ்ரீநாத்,ஹர்பஜன்சிங் ,அனில் கும்ப்ளே ,ஜாகீர்கான் ,ஜஸ்பிரித் பும்ரா