உலக கோப்பையில் இடம் கிடைக்காத விரக்தியில் அம்பத்தி ராயுடு உளறுகிறார்: பதிலடி கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 1

உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அம்பத்தி ராயுடு உலவி வருகிறார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்து முடிந்த உலக கோப்பைக்கான இந்திய அணியில் நான்காவது இடத்திற்கு அம்பத்தி ராயுடு இடம்பெறுவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. துரதிஸ்டவசமாக அவரது பெயர் உலகக்கோப்பை செல்லும் அணியின் பட்டியலில் இடம் பெறவில்லை.

உலக கோப்பையில் இடம் கிடைக்காத விரக்தியில் அம்பத்தி ராயுடு உளறுகிறார்: பதிலடி கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 2

இதனால் சற்று விரக்தியடைந்த அம்பத்தி ராயுடு, டுவிட்டரில் விஜய் சங்கர் மற்றும் தேர்வுக் குழு இருவரையும் கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையில் திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.

அதன்பின் ஒரு சில வாரங்களிலேயே தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற ராயுடு, ஆந்திரா அணிக்காக மட்டும் ஆடுவேன் என தெரிவித்தார். அந்த அணிக்காக விஜய் ஹசாரே, சையத் முஷ்டக் அலி ஆகிய தொடர்களில் கேப்டனாக பொறுப்பேற்ற ஆடி வந்தார்.

உலக கோப்பையில் இடம் கிடைக்காத விரக்தியில் அம்பத்தி ராயுடு உளறுகிறார்: பதிலடி கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 3

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன்-இல் பல முறைகேடான விஷயங்கள் நடப்பதாகவும், வீரர்களின் மத்தியில் கடும் அரசியல் நிகழ்ந்து வருவதாகவும் இதனை விரைவில் களைய கோரி அசோஷியேஷன் சேர்மன் அசாருதின்-இடம் அம்பத்தி ராயுடு கோரிக்கை விடுத்தார்.

மேலும் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ரஞ்சி கோப்பையில் தான் ஆடப்போவதில்லை. இதுபோன்று அரசியலை விரைவில் நிறுத்தவில்லை என்றால் ரஞ்சி கோப்பை அணியில் இருந்து வெளியேறுவேன் என தெரிவித்தார்.

உலக கோப்பையில் இடம் கிடைக்காத விரக்தியில் அம்பத்தி ராயுடு உளறுகிறார்: பதிலடி கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 4

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த சேர்மன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறுகையில், “அம்பத்தி ராயுடு ஒரு விரக்தியான வீரர். உலக கோப்பைக்கு சென்ற இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அப்போதிருந்த விரக்தியில் தற்போது வரை பேசி வருகிறார். இதனை பெரிதுபடுத்த வேண்டாம்” என கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *