மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடினால் இளம் வயதிலேயே ஓய்வு பெற வேண்டியது தான் நட்சத்திர வீரர் ஓபன் டாக்
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் ஐந்து வருடங்கள் மேட்ச் பிக்சிங் செய்து கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். 2010ஆம் ஆண்டு தனது 17 வயதில் மேட்ச் பிக்சிங் காரணமாக ஐந்து வருடங்கள் இவருக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் அணியில் இணைந்து மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடினார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மூன்று விதமான போட்டிகளிலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய முகமது அமீர் திடீரென டெஸ்ட் போட்டிகளில் தனது 28வது வயதில் ஓய்வினை அறிவித்தார்

இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இவரது இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி இடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு துரோகம் இழைத்து விட்டார் என்றும் பலர் கூறிவந்தனர். ஏனெனில் ஐந்து வருடங்கள் மேட்ச் பிக்ஸிங் செய்து மீண்டும் அணிக்குள் வந்த பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆட மாட்டேன் என்று கூறுவது முட்டாள்தனம் என்றும் பலர் கூறிவந்தனர். இந்நிலையில் திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஏன் ஓய்வு பெற்றார் என்பது குறித்து பேசியிருக்கிறார் முகமது அமீர். அவர் கூறுகையில்…

எனது வயதினை வைத்து நான் ஓய்வு பெற்றதை தவறு என்று மக்கள் கூறுகிறார்கள். நான்கைந்து வருடங்கள் கிரிக்கெட் விளையாட.வில்லை அது எனக்கு பெரிய தலைவலியை கொடுத்து விட்டது. என்னால் மூன்று விதமான போட்டிகளிலும் வேலைப் பழுவை சமாளித்து விளையாட முடியவில்லை. இதன் காரணமாக அந்த முடிவினை எடுக்க வேண்டியிருந்தது. ஒருவேளை மூன்று விதமான போட்டிகளிலும் தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தால் இந்நேரம் நான் ஓய்வு பெற்றிருக்க வேண்டியது தான் என்று தெரிவித்திருக்கிறார் முகமது அமீர்.