கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக டி20 போட்டிகள் ஆடப்படு வரும் நிலையில் கிரிக்கெட்டை வேகப்படுத்த இன்னும் ஓவர்கள் குறைக்கப்பட்டு டி10 லீக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் இந்த வருட டிசம்பம் மாதம் 14 முதல் 17ஆம் தேதி வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும்.
ஆறு அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்ளும் மேலும், 4 நாட்களில் லீக் முடிந்துவிடும். வழக்கமாக ஒவ்வொரு அணிக்கும் 11 வீரர்கள் தான். மேலும் ஒரு ஆட்டத்திற்கு(இன்னிங்ஸ்) 10 ஓவர்கள் மட்டுமே வீசப்படும்.
இந்த தொடரில் அணிகளின் வீரர்களுக்கான ஏலம் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பாகிஸ்தான் அணியின் இளம் இடது கை வேக்ப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் முதல் வீரராக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இந்தியா அணியின் முன்னாள் வீரர் மராத்தா அராபியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணிகளின் விவரம் :
-
மராத்தா அராபியன்ஸ்
-
கேரளா கிங்ஸ்
-
பக்தூன்ஸ்
-
பஞ்சாபி லெஜன்ட்ஸ்
-
கொலும்பு லையன்ஸ்
இந்த லீக்கில் இந்தியாவில் இருந்து 4 அணிகளும் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இருந்து தலா ஒரு அணிகளும் கலம் இறங்குகிறது. ஆனால், அணிகளில் பெரும்பாலும் வீரர்கள் கலந்து தான் காணப்படுகின்றனர்.
1.மராத்தா அராபியன்ஸ் – விரேந்தர் சேவாக்
மராத்தா அராபியன்ஸ் அணிக்கு கேப்டனாக இந்திய அனியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணியின் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், தென்னாப்பிரிக்கவின் ரில்லி ராசவ், லெண்டெல் சிம்மன்ஸ், வெய்ன் பார்னெல், குமாரா சங்ககாரா, முகமது ஆமிர் போன்ற முன்னனி வீரர்கள் உள்ளனர்.
2.கேரளா கிங்ஸ் – இயான் மார்கன்
இந்த அணியின் கேப்டனாக இங்கிலாந்து அணியின் இயான் மார்கன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சாமியுல் பத்ரி, கெய்ரோன் பொல்லார்ட், வஹாப் ரியாஸ், ஷகிப் அல் ஹசன் ஆகிய நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.
3.பஞ்சாபி லெஜன்ட்ஸ் – சோயப் மாலிக்
இந்த அணியின் கேப்டனாக பாகிஸ்தானின் சோயப் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உமர் அக்மல், மிஸ்பா உல் ஹக், கார்லோஸ் ப்ராத்வெய்ட், கிறிஸ் ஜார்டன் என பல முன்னனி வீரர்கள் உள்ளனர்.
4.பெங்கால் டைகர்ஸ் – சர்ஃபராஸ் அகமது
இந்த அணிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது கேப்டனாக நியமிகப்பட்டுள்ளார். மேலும், இந்த அணியில் டேரன் பிராவோ, சுன்னில் நரைன், முஸ்டபிஜுர் ரஹ்மான் ஆகிய நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.
5.பக்தூன்ஸ் – ஷாகித் அப்ரிடி
இந்த அணிக்கு பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி கேப்டனாக நியமிகப்பட்டுள்ளார்.
6.கொலும்பு லையன்ஸ் – தினேஷ் சண்டிமால்
இந்த அணியில் முழுவது இலங்கை வீரர்களே. திசாரா பெரேரா, லகிரு திரிமான்னே, சச்தித்ரா செனநாயகே போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளன்ர்.