இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் ஆடுவது சந்தேகம்

இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஆண்டர்சன் இந்திய டெஸ்ட் போட்டிக்கு முன்பு ஆறு வாரம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளார். ஓய்வு முடிந்த பின்னர் தான் இந்திய அணிக்கெதிரான போட்டியில் ஆடுவாரா இல்லையா என்பது உறுதிபட தெரியவரும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

(Photo Source: Getty Images)

இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு 500 விக்கெடுகளுக்கும் மேல் வீழ்த்தியுள்ளார். 2016ம் ஆண்டில் இருந்து காயங்கள் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. திரும்பவும் சில வாரங்களுக்கு முன்பாக அணியில் இடம்பெற்று இருந்தாலும் மீண்டும் காயம் காரணமாக விலகியுள்ளார்.

சில வருடங்களாக வலது தோள்பட்டையில் நீண்டநாள் வலியின் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் சரிவர பொருட்களை கூட தூக்க முடியாமல் சிரமப்பட்டார். சில வாரங்களுக்கு முன்பு தான் இயல்பு நிலைக்கு திரும்பி அணியில் இடம்பெற்றார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். இரண்டாம் போட்டியின் இறுதியில் மீண்டும் தோள்பட்டை வலி எடுக்க இங்கிலாந்து வாரியம் ஆண்டர்சன் க்கு 6 வாரம் ஓய்வளித்தது. தற்போது மருத்துவர்கள் மேற்பார்வையில் உள்ளார்.

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்,”இந்திய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க உள்ளது. இதற்கு சரியாக 6 வாரங்கள் இருக்க, ஆண்டர்சன் க்கு 6 வாரங்கள் ஓய்வுக்கு பின்னே அணியில் இடம் பெறுவது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை நடத்த உள்ளோம்.”

இதனால், ஆண்டர்சன் அணியில் இடம் பெறுவது சந்தேகமாக உள்ளது. ஆண்டர்சன் இடம் பெறாதது இங்கிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும். ஆகையால், ஆண்டர்சன் உடல்நலம் குணமடைவது குறித்து பெரிதும் எதிர்பார்க்கும் இங்கிலாந்து அணி.

Vignesh G:

This website uses cookies.