கிரிஸ் கெய்ல்லின் சாதனையை அசால்டாக தகர்த்தெறிந்த ஆண்ட்ரியூ ரசல்
ஐ.பி.எல் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் கிரிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி ஆண்ட்ரியூ ரசல் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசனி இந்தியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளில் ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவுடன் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இதுவரை 9 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,10வது போட்டியான இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
டெல்லி பிரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 61 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. நாயக் 7, உத்தப்பா 11 ரன்னில்கள் ஏமாற்றினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த லின் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். எதிர்பார்க்கப்பட்ட ரானா 1 ரன்னில் நடையைக் கட்டினார். சுப்மன் கில் 4 ரன்னில் அவுட் ஆனார். கொல்கத்தா அணி 7.3 ஓவரில்தான் 50 ரன்களை எட்டியது.
சரிவில் இருந்த அணியை கேப்டன் தினேஷ் கார்த்திக், ரஸல் ஜோடி மீட்டது. ஒரு கட்டத்தில் 120 ரன்களை தாண்டாமா என்ற நிலையில் இருந்த அணியை, 13.5 ஓவரில் 100 ரன்களை எட்ட வைத்தனர். ரஸல் சிக்ஸர் மழை பொழிந்தார். தினேஷ் கார்த்திக்கும் தன் பங்கிற்கு பவுண்டரிகளாக விளாசினார்.
ரஸல் 23 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொத்தம் 6 சிக்ஸர், 4 பவுண்டரி அவர் விளாசினார்.
இன்றைய போட்டியில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐ.பி.எல் டி.20 போட்டிகளில் அதிகவேகமாக 1000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் (மிக குறைந்த பந்துகள்) கிரிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி ஆண்ட்ரியூ ரசல் முதலிடம் பிடித்துள்ளார்.
முன்னதாக 621 பந்துகளில் 1000 ரன்கள் கடந்து கெய்ல் வைத்திருந்த இந்த சாதனையை தற்பொழுது ஆண்ட்ரியூ ரசல் வெறும் 568 பந்துகளில் 1000 ரன்கள் கடந்து முறியடித்துள்ளார்.
ஆண்ட்ரியூ ரசல் – 568 பந்துகள்
கிரிஸ் கெய்ல் – 621 பந்துகள்