தோனி இல்லை,உலகின் தலைசிறந்த பினிஷர் இவர்தான்;ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஆஸ்டன் பேட்டி 1

ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அஷ்டான் டர்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆன்ட்ரே ரசல் தான் உலகின் தலைசிறந்த பினிஷர் என்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் 5 டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

4-1 என வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரை கைப்பற்றியது. அதற்குப்பின் மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவில் மிக சிறப்பாக செயல்பட்டு 2-1 என ஒரு நாள் தொடரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

தோனி இல்லை,உலகின் தலைசிறந்த பினிஷர் இவர்தான்;ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஆஸ்டன் பேட்டி 2

கரீபியன் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் அணியில் இடம் பெற்றிருந்த அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அஸ்டன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் ரசலுடன் நடந்தது உரையாடல் பற்றி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “ரசல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகச்சிறந்த வீரர் இவரால் பல முறை அந்த அணி பல வெற்றிகளை பெற்றுள்ளது, பல இக்கட்டான நிலையிலும் மிகவும் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்யும் திறமை படைத்த ரசல் உலகின் தலைசிறந்த பினிஷர்.

இவருடைய சிறந்த ஆட்டம் பற்றி ரசலிடம் கேட்ட பொழுது அதற்கு பதில் அளித்த ரசல், தான் இப்படி அதிரடியாக விளையாடுவதற்கு முக்கிய காரணம் எனது பயிற்சியின் பொழுது இக்கட்டான நிலையிலும் எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என்று பிராக்டீஸ் செய்வது தான் என்று தெரிவித்தார்.

தோனி இல்லை,உலகின் தலைசிறந்த பினிஷர் இவர்தான்;ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஆஸ்டன் பேட்டி 3

மேலும் பேசிய அஸ்டன், எப்பேர்பட்ட நிலையிலும் தங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்வது அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும், குறிப்பாக என்னுடைய பிபிஎல் தொடரின் ஆட்டத்தில் நான் லோயர் ஆர்டர்களில் பேட்டிங் செய்கிறேன், அந்த நிலையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் அதிரடியாக விளையாட வேண்டும் அப்பொழுதுதான் அணியை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று தெரிவித்தார். சூழ்நிலையை உள்வாங்கி அதற்கு ஏற்றார்போல் செயல்பட்டால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *