வீடியோ; பயிற்சியின் போதே கேமராவை உடைத்தெறிந்த ஆண்ட்ரியூ ரசல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரியூ ரசல் பயிற்சின் போதே கேமராவை உடைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு துபாயில் துவங்கியது. இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று நடைபெறும் நான்காவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. அதே போல் நாளை நடைபெறும் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

தனது முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளதால் இந்த போட்டிக்காக கொல்கத்தா வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
? Oh gosh! That’s SMASHED – wait for the last shot..#MuscleRussell warming up to his devastating best!
@Russell12A #KKRHaiTaiyaar #Dream11IPL pic.twitter.com/0NsOHJ2Pja
— KolkataKnightRiders (@KKRiders) September 21, 2020
இந்தநிலையில், பயிற்சியின் போது கொல்கத்தா அணியின் அதிரடி நாயகனான ஆண்ட்ரியூ ரசல் கேமரா லென்சை உடைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கேப்டனை மாற்ற வேண்டும்;
கொல்கத்தா முதல் ஐந்து போட்டிகளில் சொதப்பினால் அந்த அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் தினேஷ் கார்த்திக்கை மாற்றிவிட்டு இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் யூனிட் அசுர பலம் கொண்டதாக உள்ளது. மிடில் ஆர்டரில் இயான் மோர்கன் சேர்க்கப்பட்டுள்ளது கொல்கத்தா அணிக்கு இந்த தொடரில் கூடுதல் பலத்தை கொடுக்கும். அனுபவ வீரரான இயான் மோர்கன் மற்ற அணிகளுக்கு நிச்சயம் ஆபத்தான வீரராக திகழ்வார். ஒருவேளை முதல் நான்கு, ஐந்து போட்டிகளில் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்படாவிட்டால் கொல்கத்தா அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் தினேஷ் கார்த்திக்கை மாற்றிவிட்டு இயான் மோர்கனை கொல்கத்தா நிர்வாகம் கேப்டனாக நியமிக்க வேண்டும், அதுவே கொல்கத்தா அணிக்கும் கை கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.