இந்த பந்துவீச்சாளருக்கு பயந்து பல நாள் தூங்காமல் தவித்துள்ளேன்; ரகசியத்தை வெளியிட்ட சங்ககாரா !! 1

தனது கிரிக்கெட் கேரியரில் தான் பார்த்த மிக சிறந்த பந்துவீச்சாளர்களில் அணில் கும்ப்ளே தான் முதன்மையானவர் என முன்னாள் இலங்கை வீரர் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான அனில் கும்ப்ளே, இந்திய அணிக்காக 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகளில் ஆடி 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பவுலர் கும்ப்ளே தான்.

இந்த பந்துவீச்சாளருக்கு பயந்து பல நாள் தூங்காமல் தவித்துள்ளேன்; ரகசியத்தை வெளியிட்ட சங்ககாரா !! 2

1999ல் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தார். ஒரு பவுலராக மட்டுமல்லாது கேப்டனாகவும் இந்திய அணிக்கு அளப்பரிய பங்காற்றியவர் அனில் கும்ப்ளே.

நாட்டுக்காக ஆடுவதை தவமாய் நினைத்து தனது கிரிக்கெட் கேரியர் முழுவதும் ஆடிய அணில் கும்ப்ளே, இந்திய அணிக்கு தேவைப்படும் போதெல்லாம், இக்கட்டான சூழல்களில் எல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தவர்.

அனில் கும்ப்ளே தனது கிரிக்கெட் கேரியரில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் பலருக்கு மிகப்பெரும் சவாலாக திகழ்ந்துள்ளார். அப்படி கும்ப்ளேவை எதிர்கொள்ள திணறிய முன்னாள் பேட்ஸ்மேன்களில் ஒருவர் குமார் சங்கக்கரா. பலநாள் தனது தூக்கத்தை கெடுத்த பவுலர் கும்ப்ளே என்று சங்கக்கரா கூறியுள்ளார்.

இந்த பந்துவீச்சாளருக்கு பயந்து பல நாள் தூங்காமல் தவித்துள்ளேன்; ரகசியத்தை வெளியிட்ட சங்ககாரா !! 3

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் அனில் கும்ப்ளேவை கௌரவப்படுத்தி வெளியிட்ட வீடியோவில் பேசிய குமார் சங்கக்கரா, அனில் கும்ப்ளே பலநாள் என் தூக்கத்தை கெடுத்துள்ளார். அவர் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை போன்றவர் அல்ல. உயரமான, ஹை ஆர்ம் ஆக்‌ஷனை கொண்ட பவுலர். நல்ல வேகத்தில் நேராக துல்லியமாக வீசக்கூடியவர். அணில் கும்ப்ளேவின் பவுலிங்கில் ரன் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. வெற்றி வேட்கை கொண்ட வீரர். இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டிலேயே அவர் மிகப்பெரிய சாம்பியன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *