தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு நான் இந்த பாட்டை டெடிக்கேட் பண்றேன் ! - ஆஸ்கர் வென்ற ஏஆர் ரஹ்மான் 1

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 14வது சீசன் ஏப்ரல் 9 முதல் கோலாகளமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8லீக் போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. இதில் டெல்லி, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தலா ஒரு வெற்றியும் ஆர்சிபி அணி இரண்டு வெற்றிகளையும் பெற்று இருக்கிறது.

தற்போது புள்ளி பட்டியலில் இரண்டு வெற்றிகளுடன் ஆர்சிபி அணி தான் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணி முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக படுமோசமாக தோல்வி அடைந்தது.

தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு நான் இந்த பாட்டை டெடிக்கேட் பண்றேன் ! - ஆஸ்கர் வென்ற ஏஆர் ரஹ்மான் 2

ஆனால் நேற்று நடைபெற்ற பஞ்சாப் எதிராக போட்டியில் சிஎஸ்கே பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வெறித்தனமாக விளையாடி இந்த சீசனின் முதல் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் தீபக் சஹார் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து மொயின் அலி 31 பந்தில் 46 ரன்கள் அடித்து கெத்து காட்டினார். மேலும் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா அசத்தலான ரன் அவுட் & கேட்ச் பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன்மூலம், தற்போது சிஎஸ்கே புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது.

தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு நான் இந்த பாட்டை டெடிக்கேட் பண்றேன் ! - ஆஸ்கர் வென்ற ஏஆர் ரஹ்மான் 3

இந்நிலையில், ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் மற்றும் பாடகருமான ஏ ஆர் ரஹ்மான் சிஎஸ்கே தல தோனி மற்றும் சின்ன தல சுரேஷ் ரெய்னாவுக்கு ஒவ்வொரு பாடலை டெடிக்கேட் செய்திருக்கிறார். இதன்மூலம் அனைவரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை உணர்த்துகிறார். தோனிக்கு “சலோ சலோ” பாடலையும், சுரேஷ் ரெய்னாவுக்கு “மாங்தா ஹாய் கியா” என்ற பாடலை ரஹ்மான் டெடிக்கேட் செய்துள்ளார்.

தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு நான் இந்த பாட்டை டெடிக்கேட் பண்றேன் ! - ஆஸ்கர் வென்ற ஏஆர் ரஹ்மான் 4

ஏ ஆர் ரஹ்மான் பேசுகையில் “லகனா படத்தில் வரும் ‘சலோ சலோ’ பாடலை தவ தோனிக்கு சமர்ப்பித்து அனைவரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடு வேண்டும் என்று ஊக்குவிக்கிறேன். சுரேஷ் ரெய்னாவுக்கு ‘மாங்தா ஹாய் கியா’ பாடலை சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் நான் பெங்களூர் போகும்போதெல்லாம் இவர்கள் இந்த பாடலை தான் கேட்பார்கள்” என்று ஏ ஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *