பாகிஸ்தானை மரணமாக கலாய்த்த ஹர்பஜன் சிங்; சிரிப்பாய் சிரிக்கும் ரசிகர்கள் !! 1

பாகிஸ்தானை மரணமாக கலாய்த்த ஹர்பஜன் சிங்; சிரிப்பாய் சிரிக்கும் ரசிகர்கள்

சந்திரயான் – 2 விண்கலம் நேற்று விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து  இந்திய விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.

சந்திரயான்-2 விண்கலம் மார்க்-3 ராக்கெட் மூலம் நேற்று பிற்கபல் 2:43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், செப்டம்பர் 8-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானை மரணமாக கலாய்த்த ஹர்பஜன் சிங்; சிரிப்பாய் சிரிக்கும் ரசிகர்கள் !! 2

இதனை ‘இது பெருமிதமான தருணம்’ என இஸ்ரோ தலைவர் சிவன்  தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரும் விஞ்ஞானிகளும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், இந்தியாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளதுடன் சில நாடுகளைக் கிண்டல் செய்து தனது வாழ்த்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “சில நாடுகளின் கொடியில்தான் நிலா இருக்கிறது. ஆனால் சில நாடுகளில் கொடிகள் நிலாவில் உள்ளன” என்று  ஹர்பஜன் பாகிஸ்தான் உட்பட பல அரபு நாடுகளின் கொடிகளைப்  பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *