ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடமளிக்கப்படவில்லை.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதும் ஆஷஸ் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடர் ஆகும். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் துவங்குகிறது.
ஆஷஸ் தொடருக்கான இரு அணி வீரர்களின் பட்டியலும் கடந்த வாரம் அந்தந்த அணி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது.

இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டன. முதல்முறையாக பென் ஸ்டோக்ஸுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை இரண்டாம் பாதியில் காயம் காரணமாக அவதிப்பட்டு வலிநிவாரணி எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆடிய ஜோப்ரா ஆர்ச்சர், ஆஷஸ் தொடரில் ஒரு சில போட்டிகளில் ஆட மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் அவரை அணியில் எடுத்துள்ளனர்.
நன்கு பந்து வீசி வரும் ஆர்ச்சர் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பட்டியல் வெளியிடப்பட்ட போது, முதல் 11 வீரர்களில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை.

ஆர்ச்சரின் அவரது காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அதேபோல் உடல் தகுதியும் முழுமை அடையவில்லை. தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அவரை அணியில் எடுக்காமல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:
- ரோரி பர்ன்ஸ்
- ஜேசன் ராய்
- ஜோ ரூட் (கேப்டன்)
- ஜோ டென்லி
- ஜோஸ் பட்லர்
- பென் ஸ்டோக்ஸ்
- ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்)
- மொயீன் அலி
- கிறிஸ் வோக்ஸ்
- ஸ்டுவர்ட் பிராட்
- ஜேம்ஸ் ஆண்டர்சன்