அணியில் இடம்பிடித்தார் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் !! 1

அணியில் இடம்பிடித்தார் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர்

லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் விஸ்ஸி கோப்பைக்கான 50 ஒவர் கிரிக்கெட் தொடருக்கு மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 22ம் தேதி முதல் ஆந்திராவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பின் இணையதளத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அணியில் இடம்பிடித்தார் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் !! 2

டி20 மும்பை லீகில் 19 வயது அர்ஜுன் டெண்டுல்கர் ரூ.5 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு வலைப்பயிற்சியில் தன் இடது கை வேகப்பந்து வீச்சை வீசி பயிற்சி எடுத்துக் கொண்டவர் அர்ஜுன் டெண்டுல்கர்.

மேலும் இவர் மெர்லிபோன் கிரிக்கெட் கிளப் இளம் வீரர்கள் அணியிலும் விளையாடி வருகிறார். இதுவரை டி20 கிரிக்கெட்டில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அர்ஜுன் டெண்டுல்கரின் அதிகபட்ச ஒரு இன்னிங்ஸ் விக்கெட்டாகும்.

மும்பை அணி வருமாறு:

ஹர்திக் தாமோர் கேப்டன், ஸ்ருஜன் அதாவாலே, ருத்ரா தாண்டே, சின்மய் சுதர், அக்‌ஷய் சர்தேசாய், சாய்ராஜ் பாட்டீல், ஆங்கர் ஜாதவ், சத்யலக்‌ஷா ஜெயின், மினாத் மஞ்சுரேக்கர், அர்ஜுன் டெண்டுல்கர், அமான் ஷெரான், அதர்வா பூஜாரி, மேக்ஸ்வெல் சுவாமி நாதன், பிரசாந்த் சோலங்கி, விக்னேஷ் சோலங்கி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *