சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு எந்த சிறப்பு சலுகையும் கிடையாது; பந்துவீச்ச்சு பயிற்சியாளர் சொல்கிறார்
சச்சின் மகனாக இருந்தாலும் பரவாயில்லை, நான் சொல்வதை கேட்டாக வேண்டும் என இந்திய இளம் அணி பவுலிங் பயிற்சியாளர் சனத் குமார் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான இளம் இந்திய அணி 4 நாட்கள் ஆடப்படும் இரண்டு டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைப்பெற உள்ளன.
இந்நிலையில் இளம் இந்திய அணி இலங்கைக்கு செல்ல உள்ளது. இந்த இளம் இந்திய அணி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இடம்கிடைத்துள்ளது.
இதுகுறித்து இளம் இந்திய அணி பவுலிங் பயிற்சியாளர் சனத் குமார், “சச்சின் மகன் அர்ஜுனாக இருந்தாலும் சரி, மற்ற வீரர்களும் சரி எனக்கு அனைவரும் ஒன்றுதான். இந்திய அணி வெற்றிக்கு சிறப்பாக விளையாட கவனம் செலுத்துகிறேன்.
மைதானம், போட்டியின் சூழலுக்கு ஏற்ப அணி வீரர்கள் இறக்கப்படுவார்கள். ஒவ்வொரு வீரர்களையும் அவர்களில் தனி திறனை ஊக்குவிக்க முயற்சி நடக்கிறது. இலங்கைக்கு எதிராக இந்தியா சிறப்பான வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார்.