ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்சை குறைந்த விலைக்கு தூக்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 13வது சீசனுக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஐபிஎல் தொடரில் பல அணிகளுக்கு ஆடியிருக்கிறார். இவர் முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஐபிஎல் வாழ்க்கையை துவங்கினார். அதன்பின் டெல்லி அணிக்காக 2011ஆம் ஆண்டு ஆடினார்.
பின்னர், ஹைட்ரபாத், மும்பை, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு ஆடினார். இந்த ஆண்டு பஞ்சாப் அணியால் வெளிவிடப்பட்டார். இவரது ஆரம்பவிலையாக 1 கோடி ருபாய் வைக்கப்பட்டது.
இவரை ஏலத்தில் எடுக்க பெங்களூரு மற்றும் கொல்கத்தா இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பெங்களூரு அணிக்கு துவக்க வீரர் தேவை இருந்ததால், இவரை எடுக்க தீவிரமாக முயற்சித்தது. இறுதியில் 4.4 கோடிக்கு எடுத்தது.
மேலும், பெங்களூரு அணி ஆல்ரவுண்டர் கிறிஸ் மாரிஸை 10.00 கோடிக்கு எடுத்தது.