இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சனுக்கும் ஆகாது என்று நாம் அனைவருக்குமே தெரியும், அவர்களின் சீண்டும் குணம் இன்னும் குறையவில்லை.
எதிரணி வீரர்களை சீண்டுவது பொதுவாக ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் விளையாடும் ஆஷஸ் தொடரில் நடைபெறும். அது தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரிலும் நடந்துள்ளது.
முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. இரண்டாவது இன்னிங்சின் ஐந்தாவது ஓவரில் கேமரூன் பேன்கிராப்ட் விளையாடும் போது இந்த சம்பவம் நடந்தது. எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தால் அவர்கள் தடுமாற விக்கெட்டுகளை கொடுப்பார்கள் என இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை கடுப்பேத்தி கொண்டே இருந்தார்கள்.

ஐந்தாவது ஓவரின் போது பந்துவீசி அவர் தடுத்த பிறகு ஆண்டர்சனிடமே பந்து வந்து விட்டது, அந்த பந்தை எடுத்து கேமரூன் பேன்கிராப்ட்டின் இடுப்பிலே அடித்தார், ஆனால் அந்த இளம் வீரர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஆண்டர்சனை பார்த்துவிட்டு அமைதியாக சென்றார்.

இதே போல் ஒரு சம்பவம் 2014ஆம் ஆண்டு இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் நடந்தது. அதே போல் கோலியின் பந்தை அடித்தார் ஜான்சன், கீழே விழுந்த கோலி அந்த பந்தை எடுத்து திருப்பி அனுப்பிவிட்டார்.
பந்தை அடித்ததும் விராட் கோலி அமைதியாக இருக்க வில்லை, அவரும் மிட்சல் ஜான்சனிடம் வம்புக்கு சென்றார்.