தம்பிங்களா.. உங்ககிட்ட இது சுத்தமா இல்ல; இங்கிலாந்தை கடுமையாக சாடிய ஆஸி., ஜாம்பவான்! 1

இங்கிலாந்து அணியின் இத்தகைய படுதோல்விக்கு இது மட்டுமே காரணம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாக சாடியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடர் ஒருதலைபட்சமாக சென்றுவிட்டது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் மூன்று போட்டியை இங்கிலாந்து அணி படுமசமாக இழந்திருக்கிறது. குறிப்பாக மூன்றாவது போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று மோசமான நிலைக்கு சென்றிருக்கிறது. முதலிரண்டு போட்டிகளிலும் 9 விக்கெட்டுகள் தோல்வி மற்றும் 275 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த பிறகும், ஒரே மாதிரியான தவறை மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி செய்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆஷஸ் தொடர் ஒருதலைப்பட்சமாக சென்றுள்ளதாக பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தம்பிங்களா.. உங்ககிட்ட இது சுத்தமா இல்ல; இங்கிலாந்தை கடுமையாக சாடிய ஆஸி., ஜாம்பவான்! 2

இங்கிலாந்து அணி முதல் மூன்று போட்டிகளில் இப்படி ஒரு மோசமான தோல்வியை சந்தித்ததற்கு முக்கியமான காரணம் இதுதான் என்று ஆணித்தனமாக சுட்டிக்காட்டியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.

தம்பிங்களா.. உங்ககிட்ட இது சுத்தமா இல்ல; இங்கிலாந்தை கடுமையாக சாடிய ஆஸி., ஜாம்பவான்! 3

“இங்கிலாந்து அணியின் திட்டம் மற்றும் செயல்பாடு இரண்டும் தவறாக சென்றிருக்கிறது. தங்களது திட்டம் தவறு என தெரிந்தும் அதனை தொடர்ந்து செயல்படுத்தி வந்ததால், அதன் பின்விளைவாக தொடரை இழந்து நிற்கின்றனர். பிரிஸ்பேன் டெஸ்டில், தனது தலைசிறந்த பந்துவீச்சாளர்களான பிராட் மற்றும் ஆண்டர்சன் இருவரையும் ஆட வைக்கவில்லை. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில், நன்றாக பந்துவசி வந்த மார்க் உட் விளையாடவில்லை. அதனை சரி செய்வதற்கு ஜோ ரூட் பந்துவீசினார். இப்படி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்வது என்று தெரியாமல் மாறிமாறி திட்டங்களை செயல்படுத்தியதால் தோல்வியுற்று இருந்தனர்.

முதல் 2 போட்டிகளிலும் தோல்வியற்ற பிறகு, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இன்னும் கூடுதலான கவனம் செலுத்தி மிகச் சிறந்த அணியை வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் செய்த அதே தவறை மூன்றாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி செய்திருப்பது முட்டாள்தனமாக தெரிகிறது. 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து போராடவில்லை. தொடர்ச்சியான தவறுகளால் இப்போது தொடர் கைவிட்டுச் சென்று இருக்கிறது.” என்று ரிக்கி பாண்டிங் கடுமையாக சாடினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *