ஜஸ்ட் மிஸ்... 1 ரன்னில் போச்சுடா! சேவாக் ரெக்கார்டை காலி செய்து... டேவிட் வார்னர் டெஸ்டில் புதிய சாதனை! 1

டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக வீரேந்திர சேவாக் படைத்த சாதனையை முறியடித்து பட்டியலில் முன்னேறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்தார்.

இங்கிலாந்தில் தற்போது ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்கில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.

ஜஸ்ட் மிஸ்... 1 ரன்னில் போச்சுடா! சேவாக் ரெக்கார்டை காலி செய்து... டேவிட் வார்னர் டெஸ்டில் புதிய சாதனை! 2

அடுத்ததாக முதல் இன்னிங்சில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கவாஜா 141 ரன்கள் அடித்து அசத்தினார். வார்னர் 9 ரன்கள் மட்டுமே அடித்தார்.

ஏழு ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொத்தம் 280 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

ஜஸ்ட் மிஸ்... 1 ரன்னில் போச்சுடா! சேவாக் ரெக்கார்டை காலி செய்து... டேவிட் வார்னர் டெஸ்டில் புதிய சாதனை! 3

281 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரர் வார்னர் 36 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கி 8208 அடித்தார். இதன் மூலம் துவக்க வீரராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் இந்திய துவக்க வீரர் விரேந்திர சேவாக்கை பின்னுக்க்கு தள்ளி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரர் சேவாக் 99 டெஸ்ட் போட்டிகளில் 8207 ரன்கள் அடித்த ரெக்கார்டை முறியடித்த வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 45.50 சராசரியுடன் 25 சதங்கள் உட்பட மொத்தம் 8247 ரன்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் துவக்க வீரராக மட்டுமே 8208 ரன்கள் அடித்துள்ளார்.

ஜஸ்ட் மிஸ்... 1 ரன்னில் போச்சுடா! சேவாக் ரெக்கார்டை காலி செய்து... டேவிட் வார்னர் டெஸ்டில் புதிய சாதனை! 4

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்துள்ள துவக்க வீரர்கள் பட்டியல்

வரிசை வீரர் பெயர் நாடு ரன்கள்
1. அலஸ்டர் குக் இங்கிலாந்து 11845
2. சுனில் கவாஸ்கர் இந்தியா 9607
3. கிரேம் ஸ்மித் தென்னாப்பிரிக்கா 9030
4. மேத்யூ ஹைடன் ஆஸ்திரேலியா 8625
5. டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 8208*
6. வீரேந்திர சேவாக் இந்தியா 8207

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்..

281 ரன்கள் இலக்கை துரத்தி வரும் ஆஸ்திரேலியா அணி வார்னர் லபுஜானே ஸ்மித் ட்ராவல்ஸ் ஹெட் போன்ற முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. வெற்றி பெறுவதற்கு இன்னும் 138 ரன்கள் தேவைப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *