இவரையாடா எடுக்காம வச்சிருந்தீங்க... வந்த முதல் போட்டியில் 5 விக்கெட்ஸ்... ஆட்டம்கண்ட ஆஸ்திரேலியா 263-க்கு ஆல் அவுட்! 1

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மிட்ச்சல் மார்ஷ் 118 ரன்கள் குவித்தார். மார்க் வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் இரண்டிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி ஹெட்டிங்க்லே மைதானத்தில் இன்று துவங்கியது.

இவரையாடா எடுக்காம வச்சிருந்தீங்க... வந்த முதல் போட்டியில் 5 விக்கெட்ஸ்... ஆட்டம்கண்ட ஆஸ்திரேலியா 263-க்கு ஆல் அவுட்! 2

இப்போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்களாக வார்னர் மற்றும் கவாஜா இருவரும் களமிறங்கினர்.

ஸ்டுவர்ட் பிராட் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்த வார்னர், அடுத்த பந்திலேயே ஜாக் கிராலி வசம் பிடிபட்டு வெளியேறினார். உஸ்மான் கவாஜா 13 ரன்கள் அடித்திருந்தபோது மார்க் வுட் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

இவரையாடா எடுக்காம வச்சிருந்தீங்க... வந்த முதல் போட்டியில் 5 விக்கெட்ஸ்... ஆட்டம்கண்ட ஆஸ்திரேலியா 263-க்கு ஆல் அவுட்! 3

உள்ளே வந்த மார்னஸ் லபுஜானே மீண்டும் தன்னுடைய மோசமான பார்மை காட்டினார். இவர் 21 ரன்கள் மட்டுமே அடித்து கிறிஸ் வோக்ஸ் பந்தில் அவுட் ஆனார். நல்ல ஃபார்மிலிருந்த ஸ்டீவ் ஸ்மித் ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் வெறும் 22 ரன்கள் மட்டுமே அடித்திருந்தபோது வெளியேறினார்.

கேமரூன் கிரீன் தசைப்பிடிப்பு காரணமாக வெளியில் இருந்ததால் இப்போட்டியில் விளையாட வைக்கப்பட்ட மிட்ச்சல் மார்ஸ் தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணிக்கு முக்கிய பங்காற்றினார். இங்கிலாந்து பவுலர்களை சிதறடித்தார். 85 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை 200 ரன்கள் கடக்க உதவினார்.

இவரையாடா எடுக்காம வச்சிருந்தீங்க... வந்த முதல் போட்டியில் 5 விக்கெட்ஸ்... ஆட்டம்கண்ட ஆஸ்திரேலியா 263-க்கு ஆல் அவுட்! 4

மார்ஷ் 118 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உட்பட 118 ரன்கள் விளாசி, கிரிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆனார். வழக்கத்திற்கு மாறாக இம்முறை ஆங்கரிங் இன்னிங்ஸ் விளையாடிய டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த வீரர்கள் அலெக்ஸ் கேரி(8), ஸ்டார்க்(2), கம்மின்ஸ்(0), டாட் மர்ஃபி(13) ஆகியோர் சொற்பரன்களுக்கு வரிசையாக மார்க் வுட் பந்தில் வெளியேற, ஆஸ்திரேலியா அணி 3ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இவரையாடா எடுக்காம வச்சிருந்தீங்க... வந்த முதல் போட்டியில் 5 விக்கெட்ஸ்... ஆட்டம்கண்ட ஆஸ்திரேலியா 263-க்கு ஆல் அவுட்! 5

ஆண்டர்சன் மற்றும் ஜோஸ் டங் ஆகியோருக்கு பதிலாக உள்ளே வந்த இருவர்களான மார்க் வுட் 5 விக்கெட்டுகளும், கிரிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *