பும்ராவை விட திறமையான பந்துவீச்சாளராக மாறிவிட்டார் ! ஆர்சிபி பவுலரை கைகாட்டிய ஆஷிஷ் நெஹ்ரா
இந்திய அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உலகளவில் சிறந்த பவுலராக திகழ்ந்து வருகிறார். இவர் தனது பவுலிங்கில் பல சாதனைகளை படைத்து வருகிறார். அதுமட்டுமின்றி, பும்ராவின் பந்தை எதிர்கொள்ள பேட்ஸ்மன்கள் திணறுவார்கள். இவர் இதுவரை 19 டெஸ்ட், 67 ஒருநாள் மற்றும் 49 டி20 சர்வதேச போட்டிளில் இந்தியா அணிக்காக விளையாடி இருக்கிறார்.
இதில் 250 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதனால் இவருக்கு இணையான வீரர் யாரும் இல்லை என்று பல முன்னாள் வீரர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் தற்போது ஆஸ்திரேலியா தொடரில் அறிமுகமாகிய ஆர்சிபி வீரர் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி இருப்பதால் அவரை அனைவரும் பாராட்டினர்.

அதேபோல் தற்போது நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் சீசனிலும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்த ஐபிஎல்லில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 5 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டும் கொடுத்து பட்லர், மில்லர், திவாட்டியா ஆகியோரின் மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
இதனால் முகமது சிராஜை அனைவரும் பாராட்டி வந்தனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா சிராஜை பாராட்டி இருக்கிறார். அவர் கூறுகையில் “பும்ராவை விட முகமது சிராஜ் திறமையானவராக மாறிவிட்டார். சிராஜ் இந்திய அணிக்காக மூன்று பார்மட்களிலும் அறிமுகமாகி சிறப்பாக பந்து வீசியிருக்கிறார். திறன் ரீதியாக முகமது சிராஜ் பும்ராவுக்குப் பின்னால் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய போது சிவப்பு பந்தில் 5-6 விக்கெட்களை வீழ்த்தினார். சிவப்பு பந்தில் சிறப்பாக விளையாடும் இவர் வெள்ளை பந்திலும் சிறப்பாக விளையாடுவார் என்று நினைத்தேன். முகமது சிராஜ் திறமையானவராக இருக்கிறார். இவர் பல வேரியேசன்களில் பந்து வீசுகிறார். இவர் தனது பிட்னஸில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே போது. இவருக்கு பல உயரங்கள் காத்திருக்கிறது” என்று கிரிக்பஸிற்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
