இந்திய அணியில் இந்த வீரரை அடிச்சிக்க ஆளே கிடையாது; ஆஷிஸ் நெஹ்ரா ஓபன் டாக்
இந்திய அணியின் ஆல் டைம் சிறந்த பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே தான் என முன்னாள் பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் தாக்கம் காரணமாக உலகமும் வீட்டிலேயே முடங்கி போயுள்ளதை போன்று, சில நாட்டு கிரிக்கெட் வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி போயுள்ளனர்.
வீட்டிலேயே முடங்கியுள்ளதால் டைம் பாஸிற்கு சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அக்டிவாக இருக்கும் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ரசிகர்களுடன் உரையாடியும் வருகின்றனர். தங்களது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து உரையாடுவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ரா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணி கண்டெடுத்த மிகச்சிறந்த பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளே தான் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து ஆஷிஸ் நெஹ்ரா கூறியதாவது;
கும்ப்ளே இந்திய அணிக்காக ஆடியதை நான் டிவியில் முதல் முறை பார்த்தபோது அவர் கிளாஸ் போட்டிருந்தார். அந்த பெரிய கிளாஸ்களை போடுவார். ஆனால் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடும்போது, முகம், உடல்மொழி, ஸ்டைல் ஆகியவை 5-6 ஆண்டுகளில் அதுவாகவே மாறிவிடும். ஆனால் பவுலிங்கில் அவர் இந்தியாவின் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்று ஆஷிஸ் நெஹ்ரா கும்ப்ளேவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணிக்காக 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அணில் கும்ப்ளே அதில் 619 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதே போல் 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இது தவிர ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் அணில் கும்ப்ளேவையே சாரும்.