டெஸ்ட் லெஜெண்ட் பட்டத்தை தூக்கி சீக்கிரம் கொடுங்க... அசைக்கமுடியாத அனில் கும்ப்ளே ரெக்கார்டை நெருங்கிய நம்ம அஸ்வின்! 1

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் ஜாம்பவான் அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அபார சுழலால் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

டெஸ்ட் லெஜெண்ட் பட்டத்தை தூக்கி சீக்கிரம் கொடுங்க... அசைக்கமுடியாத அனில் கும்ப்ளே ரெக்கார்டை நெருங்கிய நம்ம அஸ்வின்! 2

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு சுருண்டது. இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்களுக்கு சுருண்டது.

இந்த போட்டியில் மொத்தம் 12 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 8ஆவது முறையாக 10 பிளஸ் விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய வரலாறு படைத்திருக்கிறார். டெஸ்டில் அதிக முறை 10 பிளஸ் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் மத்தியில் அணில் கும்ப்ளே எட்டு முறை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். இப்போது அஸ்வின் அந்த சாதனையை சமன் செய்திருக்கிறார்.

டெஸ்ட் லெஜெண்ட் பட்டத்தை தூக்கி சீக்கிரம் கொடுங்க... அசைக்கமுடியாத அனில் கும்ப்ளே ரெக்கார்டை நெருங்கிய நம்ம அஸ்வின்! 3

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 10 பிளஸ் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்கள்:

1. அனில் கும்ப்ளே – 8 முறை

1. ஆர் அஸ்வின் – 8 முறை

3. ஹர்பஜன் சிங் – 5 முறை

ஒட்டுமொத்தமாக அதிகமுறை 10+ 1விக்கெட்டுகள் எடுத்த பவுலர்கள்:

டெஸ்ட் லெஜெண்ட் பட்டத்தை தூக்கி சீக்கிரம் கொடுங்க... அசைக்கமுடியாத அனில் கும்ப்ளே ரெக்கார்டை நெருங்கிய நம்ம அஸ்வின்! 4

1. முத்தையா முரளிதரன் – 22 முறை

2. ஷென் வார்னே – 10 முறை

3. ரிச்சர்ட் ஹாட்லி – 9 முறை

4. ரங்கனா ஹீரத் – 9 முறை

5. அஸ்வின் – 8 முறை

6. அனில் கும்ப்ளே – 8 முறை

ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் அணில் கும்ப்ளே மொத்தமாக 956 விக்கட்டுகளுடன் முதல் இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் 709 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். ஹர்பஜன் சிங் ஒரு இடம் பின்தங்கி 707 விக்கெட்டுகளுடன் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது 34 முறை கைப்பற்றி அனில் கும்ப்ளேவிற்கு (35 முறை) அடுத்த இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் லெஜெண்ட் பட்டத்தை தூக்கி சீக்கிரம் கொடுங்க... அசைக்கமுடியாத அனில் கும்ப்ளே ரெக்கார்டை நெருங்கிய நம்ம அஸ்வின்! 5

ஒட்டுமொத்தமாக பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஆண்டர்சன் மற்றும ரங்கனா ஹீரத் இருவரையும் பின்னுக்கு தள்ளி இந்த இடத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முந்தைய இடங்களில் முத்தையா முரளிதரன், வார்னே, ரிச்சர்ட் ஹாட்லி, அனில் கும்ப்ளே ஆகியோர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *