'தோனி எனக்கு சொல்லிக்கொடுத்த மந்திரம்' என்னை இத்தனை வருடம் கைப்பற்றியது; அஸ்வின் ஓபன் டாக்!! 1

தோல்வியிலிருந்து துவண்டு விடாமல் இருக்க தோனி சொல்லிக்கொடுத்த மந்திரம் எனக்கு இத்தனை வருடங்கள் உதவியது என்று சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய பிறகே, இந்திய அணியிலும் இடம் பிடித்தார். அஸ்வினை தோனி பலமுறை துவக்க பந்துவீச்சாளராக பயன்படுத்தி விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

'தோனி எனக்கு சொல்லிக்கொடுத்த மந்திரம்' என்னை இத்தனை வருடம் கைப்பற்றியது; அஸ்வின் ஓபன் டாக்!! 2

2015ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்  இருந்து  வந்த அஸ்வின் தோனியுடன் நல்ல நட்புறவில் இருந்திருக்கிறார். தோனியிடம் பலமுறை அறிவுரைகளை கேட்டுள்ளார் அஸ்வின். அப்போது தோனி, எப்படி தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டும்? காயம் காரணமாக போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் பொழுது, நல்ல மனநிலையில் நம்மை எப்படி வைத்துக் கொள்வது? என பலவற்றிற்கு தோனி தன்னிடம் அறிவுரை கூறி இருப்பதாக சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசினார் அஸ்வின்.

'தோனி எனக்கு சொல்லிக்கொடுத்த மந்திரம்' என்னை இத்தனை வருடம் கைப்பற்றியது; அஸ்வின் ஓபன் டாக்!! 3

“என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் தோல்விகளுக்காக பயந்ததில்லை. மைதானத்தில் சென்று நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்பொழுது தோற்றாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருப்பேன். ஒருமுறை தோனி என்னிடம் எப்போதும் முடிவுகளை நம்பி இருக்கக்கூடாது. நீ எப்படி பயிற்சி செய்கிறாய் என்பதை மட்டுமே மனதில் கொள்ள வேண்டும். லட்சக்கணக்கான கோடிக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் தோல்வியை தழுவுவது பரவாயில்லை. ஆனால் தோல்வியை கண்டு அஞ்சி விளையாடாமல் ஓரமாக நிற்பதுதான் மிகப்பெரிய தோல்வி. ஆகையால் மைதானத்திற்குள் உள்ளே வந்து முழு திறமையை வெளிப்படுத்தி விளையாட வேண்டும். அது மட்டும் தான் முக்கியம். சவாலை எதிர்கொள்ள பயப்படுவதை விட இது உயர்ந்த செயல்.” என்றார்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இவ்வளவு பெரிய நம்பிக்கை தரும் வார்த்தைகள் கிடைத்ததால் என்னால் இத்தனை வருடங்கள் சிறப்பாக செயல்பட முடிந்தது என்று நம்புகிறேன். அதேபோல் ஒவ்வொரு முறை நான் காயம் காரணமாக வெளியில் இருக்கும் பொழுதும் தோனியின் இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஒரு முறை கூட நான் துவண்டதில்லை என மனம் திறந்து பேசினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *