கோப்பையை வெல்ல போவது யார்..? முதலில் பேட்டிங் செய்கிறது வங்கதேசம் !! 1

கோப்பையை வெல்ல போவது யார்..? முதலில் பேட்டிங் செய்கிறது வங்கதேசம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய  அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கண்டத்தின் கிரிக்கெட் வல்லரசை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் இந்திய அணியும், வங்கதேச அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் ஆசிய கோப்பையை தீர்மானிக்கும் இறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்றுள்ள இந்திய  அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

கோப்பையை வெல்ல போவது யார்..? முதலில் பேட்டிங் செய்கிறது வங்கதேசம் !! 2

இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கடந்த போட்டியில் விளையாடிய கே.எல் ராகுல், சித்தார்த் கவூல், கலில் அஹமது போன்ற வீரர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், பும்ராஹ் போன்ற சீனியர் வீரர்கள் அனைவரும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இதே போல் வங்கதேச அணியில் மூஹ்மினுல் ஹக்கிற்கு பதிலாக நஸ்முல் இஸ்லாம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணி;

ஷிகர் தவான், ரோஹித் சர்மா,அம்பத்தி ராயூடு, தினேஷ் கார்த்திக், தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ராஹ்.

இந்த போட்டிக்கான  வங்கதேச அணி;

லிடன் தாஸ, சவுமியா சர்கார், நஸ்முல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹிம், முகமது மிதுன், இம்ருல் கயீஸ், மஹ்மதுல்லாஹ், மோர்டசா, மெஹ்தி ஹசன், ரூபல் ஹுசைன், முஸ்தபிசுர் ரஹ்மான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *