Use your ← → (arrow) keys to browse
ஆசிய கோப்பை 2018; இந்திய வீரர்களுக்கான ரேட்டிங்
ஆசிய கண்டத்தின் கிரிக்கெட் வல்லரசை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது.
இந்த தொடரின் இறுதி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வங்கதேச அணியை கடைசி பந்தில் வீழ்த்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்களின் செயல்பாடுகள் எப்படி..? அவர்களுக்கான ரேட்டிங் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
ஷிகர் தவான் – 7/10
இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் இறுதி போட்டியில் சொதப்பியிருந்தாலும் மற்ற போட்டிகளில் சிறப்பாகவே விளையாடினார். இதன் காரணமாகவே இவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

Use your ← → (arrow) keys to browse