வீடியோ; மிரட்டலான கேட்ச் மூலம் பாகிஸ்தான் கேப்டனை வெளியேற்றிய மணிஷ் பாண்டே
இந்திய அணியை வீழ்த்தியே தீருவேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமதை, இந்திய வீரர் மணிஷ் பாண்டே தனது மிரட்டலான கேட்ச் மூலம் வெளியேற்றினார்
துபாயில் கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பரம எதிரிகளாக பாவிக்கப்பட்டு வரும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்கம் கொடுக்க களமிறங்கிய இமாம் உல் ஹக் மற்றும் ஃப்கர் ஜமானை புவனேஷ்வர் குமார் அடுத்தடுத்து வெளியேற்றி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

இதனையடுத்து களமிறங்கிய பாபர் அசாம் 47 ரன்களும், சோயிப் மாலிக் 43 ரன்களும் எடுத்து கைகொடுத்தனர், பின்னர் வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டனான சர்பராஸ் அஹமது 6 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய வீரர் கேதர் ஜாதவ் வீசிய போட்டியின் 24வது ஓவரின் 5வது பந்தை சிக்ஸர் தூக்கி அடிக்க முயன்றார், ஆனால் பவுண்டரி லைனில் நின்றிருந்த மணிஷ் பாண்டே பந்தை சரியாக கணித்து அசால்டாக கேட்ச் பிடித்து மாஸ் காட்டினார்.
போட்டி துவங்குவதற்கு முன்பு வரை இந்திய அணியை வீழ்த்தியே தீருவேன் என்பது போன்று ஒவ்வொரு பேட்டியிலும் வீராப்பாக பேசி வந்த சர்பராஸ் அஹமதை வெளியேற்றிய மணிஷ் பாண்டேவிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
வீடியோ;
https://twitter.com/iamkhurrum12/status/1042404589528645632
மேலும், மணிஷ் பாண்டேவின் இந்த அசாத்திய கேட்ச் குறித்தான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.