1- ரவிச்சந்திர அஸ்வின்;
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்த ரவிச்சந்திர அஸ்வினுக்கு இந்திய அணி திடீரென முக்கியத்துவம் கொடுத்து வருவது குழுப்பத்தை மட்டுமே ஏற்படுத்தி வருகிறது. டி.20 உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில், அதற்கான வீரர்களை கட்டமைப்பதே இந்திய தேர்வுக்குழுவின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இந்திய அணியின் தேர்வுக்குழுவோ இந்த நேரத்தில் கூட அணியில் இருந்து தேவையே இல்லாமல் வீரர்களை நீக்குவதும், புது புது வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதும் வேடிக்கையாக உள்ளது. இந்திய அணிக்கு இது பெரும் பின்னடைவை கொடுக்கும் என்றே பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அஸ்வினை விட ஐபிஎல் தொடரில் இருந்து தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குல்தீப் யாதவிற்கு இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. அதுவே எதிர்கால இந்திய அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.